கோடை பருவத்திற்கேற்ற உளுந்து ரகங்கள்
நெல் அறுவடைக்குப் பிறகு பயிர் சுழற்சி முறையில் பெரும்பாலும் விவசாயிகள் உழுந்தினை பயிர் செய்கின்றனர். பொதுவாக கோடை பருவத்தில் உளுந்து பயிரிடப்படுவது வழக்கமான செயலாகும். பொதுவாக இந்த பயிர் வகை பயிர்களானது சிறுதானிய பயிர்களை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு புரதச்சத்தினை கொண்டுள்ளது.
நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியங்கள்
இந்த பருப்பு வகை தாவரப் பயிர்களின் வேர் முடிச்சுகளில் ரைசோபியம் எனப்படும் கூட்டுயிரி வாழ்க்கை வாழக்கூடிய நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை கவர்ந்து அவற்றை தாவரங்களுக்கு பயன்படக்கூடிய வகையில் வழங்குகிறது. இதற்கு பிரதிபலனாக அவை தாவரங்களின் வேர் முடிச்சுகளில் பாதுகாப்பான இடத்தைப் பெறுகிறது. எனவே இவ்வகை பாக்டீரியங்கள் கூட்டுயிரி பாக்டீரியா என அழைக்கப்படுகிறது.
இதனால் தாவரங்கள் போதுமான நைட்ரஜன் சத்துக்கள் கிடைப்பதால் அவற்றின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அறுவடைக்குப்பின் அவற்றின் எஞ்சிய தாவரத்தண்டு, இலைகள் மற்றும் வேர்கள் ஆகியவை மீண்டும் அப்படியே மண்ணில் உழவு ஓட்டி விடுவதால் இந்த பாக்டீரியங்கள் மண்ணில் நிலைத்துவிடுகின்றன. இவை உற்பத்தி செய்த நைட்ரஜன் மண்ணில் மீண்டும் பருப்பு பயிர் வகையின் மூலம் சேர்க்கப்படுகின்றன.
உரமிட்டு நிலத்தை தயார் செய்தல்
இது ஒரு ஏக்கருக்கு 100 கிலோ என்ற அளவில் தலைச்சத்தை நிலை நிறுத்தி அடுத்ததாக பயிரிடக்கூடிய பயிர்களுக்கு இதை அளிக்க வேண்டும். இதனால் மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இதன் ஆணிவேரானது ஆழமாக செல்வதாலும் இதன் இலைகள் அதிகமாக உதிர்வதாலும் இது அங்ககப் பொருள் மண்ணில் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இதனாலும் மண்வளம் மேம்படுத்தப்படுகிறது. மேலும் இந்த பயிர் வகை பயிர்களானது பயிர் சுழற்சி முறைக்கு மிகவும் ஏற்றது.
முக்கியமாக காவேரி டெல்டா பகுதிகளின் பாசன பகுதிகளில் அதாவது இந்த முக்கியமாக பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் இந்த உளுந்து பயிர்கள் அதிகமாக பயிரிடப்படுகிறது. கோடையில் அதுவும் இரவையில் அதிகமாக இப்பயிர் பயிரிடப்படுகிறது. எனவே விவசாயிகள் இந்த கோடை பருவத்தில் பயிரிடுவதால் இந்த பருவத்தில் ஏற்படும் நோய்கள் மற்றும் பூச்சிகள் மிகக் குறைவாக இருக்கும்.
கோடைக்கு ஏற்ற ரகங்களை தேர்வு செய்தல்
ஆகவே இந்த ஆடிப்பட்டத்தில் உளுந்தை பயிரிடுவதற்கு பதிலாக இந்த கோடையில் உளுந்து பயிரிடுவதால் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் குறைவாக இருக்கும் என்பதால் இதன் மகசூலையும் நம்மால் அதிகரிக்க இயலும். எனவே இந்த கோடை பருவத்திற்கு ஏற்ற ரகங்களை கண்டறிந்து விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும்.
கோடை சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆடுதுறை 5 என்ற இந்த உளுந்து ரகம் அதிக மகசூலை தரக்கூடியது. இந்த ஆடுதுறை 5 என்ற ரகம் 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறையிலிருந்து வெளியிடப்பட்டது. இதை கான்பூர் என்ற ஒரு ரகத்தில் இருந்து தனி வழி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இது 62 நாட்கள் முதல் 65 நாட்கள் வரை வயதுடையது. நாம் இந்த ரகத்தை மறுதாம்பு ரகமாகவும் பயன்படுத்த முடியும்.
அதாவது ஒரு அறுவடைக்குப் பின்னர் மீண்டும் உரமிட்டு தண்ணீர் விட்டு இதை விதைத்த 90 நாட்களில் மீண்டும் இரண்டாவது முறையாகவும் நாம் அறுவடை செய்யலாம். இதனுடைய இலைகள் கட்டி இலையாகவும், செடிகள் குத்தாகவும் ஒரு செடிக்கு மூன்று பக்க கிளைகளையும் உடையது. ஒரு செடிக்கு 60 முதல் 90 காய்களை கொண்டிருக்கும். காய்கள் மற்றும் இலைகளின் அதிகமாக ரோமங்கள் காணப்படும். இந்த ரகத்தைப் பயன்படுத்தி நாம் விவசாயம் செய்யும் பொழுது உழுந்து பயிரில் ஏற்படும் மஞ்சள் தேமல் நோய் என்ற ஒரு நோய்க்கு எதிர்ப்பு சக்தி பெற்றது என்பதால் நாம் அதிகமாக விளைச்சலை ஈட்ட முடியும்.
அடுத்ததாக பாம்பன் ஆறு என்ற ரகம் 2011 ஆம் ஆண்டு தேசிய பயிர் ஆராய்ச்சி மையம் வம்பனிலிருந்து வெளியிடப்பட்டது. இது பாம்பன் ஒன்று மற்றும் விக்னாமுங்கோ சில்வர் ஸ்டோர்ஸ் ஆகிய இரண்டு ரகங்களை ஒட்டுக்கலந்து அதன் சந்ததியில் இருந்து பெறப்பட்ட ஒரு ரகமாகும். இது 65 முதல் 75 நாட்கள் வயது உடையது. இதுவும் உழுந்து பயிர்களில் ஏற்படும் இளைக்குறுத்துப் பூழு மற்றும் மஞ்சள் தேமல் நோய் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு திறன் கொண்டுள்ளது.
அடுத்ததாக பாம்பன் எட்டு இந்த ரகமானது 1916 ஆம் ஆண்டு தேசிய பயிர் ஆராய்ச்சி மையம் மும்பையில் இருந்து வெளியிடப்பட்டது. இது பாம்பன் மூன்று மற்றும் bpl 04008 ஆகிய ரகங்களை ஒட்டி கலந்து அதன் சந்ததியிலிருந்து பெறப்பட்ட ஒரு ரகமாகவும். இது 65 நாட்கள் முதல் 70 நாட்கள் வரை வயதுடையது. இது ஒரு ஹெக்டருக்கு 988 கிலோ வரை மகசூல் கொடுக்கக்கூடியது. இது மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் ஆகியவற்றிற்கு எதிர்ப்புத்திறன் கொண்டுள்ளது.
அடுத்ததாக பாம்பன் பதினொன்று கம்பன் 11 என்ற ரகம் 2020 ஆம் ஆண்டு தேசிய பயிர் ஆராய்ச்சி மையம் கம்பனியிலிருந்து வெளியிடப்பட்டது. இந்த ரகமானது 65 நாட்கள் முதல் 70 நாட்கள் வரையில் ஒரு ஹெக்டருக்கு 940 கிலோ வரை மகசூல் கொடுக்கக்கூடியது. இந்த ரகத்தினை அனைத்து பருவங்களிலும் நாம் பயிரிடலாம். மேலும் இது மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது. இந்த ரகங்களின் தொழில்நுட்பங்களை பொறுத்தவரையில் நாம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு 20 கிலோ விதை தேவைப்படுகிறது.
நடவு செய்யும் முறை
நாம் இதை விதைப்பதற்கு இந்த நிலத்தினை நன்றாக புழுதி பறக்க உழுது நிலத்தை தயார் செய்ய வேண்டும். ஒரு ஹெக்டருக்கு 12.5 டன் நன்கு மக்கிய தொழு உரத்தை இடவேண்டும். மக்கிய தொழு உரமிட்டு பார் அமைக்க வேண்டும். நம்மிடம் உள்ள பாசன நீருக்கு தகுந்தபடி மூன்றுக்கு மூன்று மீட்டர் அல்லது மூன்றுக்கு நான்கு மீட்டர் என்ற அளவில் பாத்திகள் அமைத்து நாம் விதைகளை விதைக்கலாம். விதைகளை விதைக்கும் பொழுது வரிசையாக நட வேண்டும். ஒரு வரிசைக்கு இன்னொரு வரிசைக்கும் இடையில் 30 சென்டிமீட்டர் என்ற இடைவெளியும், ஒரு வரிசையில் ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் இடையில் 10 சென்டிமீட்டர் என்ற இடைவெளியும் விட்டு நடுவது நல்லது.
ஒரு குழிக்கு இரண்டு விதைகள் இடுவது மிகவும் நல்லது. விதைப்பதற்கு முன்னதாக விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதற்காக ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் என்ற அளவில் அசோஸ்பைரில்லம், ரைசோபியம் அல்லது டிரைகோடெர்மா விரிடி போன்ற நுண்ணுயிரிகளை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம். இதை விதை விதைப்பு செய்வதற்கு முன்பாக 24 மணி நேரம் முன்பு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்த பிறகு அதாவது 24 மணி நேரம் கழித்து நாம் ரைசோபியம் இரண்டு பாக்கெட் மற்றும் பாஸ்போ பாக்டீரியா ரெண்டு பாக்கெட் ஆகியவற்றை கலந்து ஒரு வடித்த கஞ்சியில் கலந்து நாம் விதை நேர்த்தி செய்து அதை நிழலில் உலர்த்தி நாம் விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
களைச் செடிகள் நிர்வாகம்
அடுத்ததாக களை நிர்வாகம் இதை விதைத்த மூன்று நாட்களில் ஒரு எக்டருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் இதை கலந்து மண்ணில் மணலில் கலந்தோ அல்லது நீரில் கலந்தோ தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம். 25 நாட்கள் கழித்து கைகள் மூலம் களை எடுக்க வேண்டும். இதன் மூலம் நாம் களைகளை நன்கு கட்டுப்படுத்த முடியும். அடுத்ததாக பயிர் வளர்ச்சி பருவத்தின் பயிர் அதிசயம் அதாவது டிஎன்ஏயு பயிர் அதிசயம் என்ற ஒரு பயிர் ஊக்கியை ஒரு ஹெக்டேருக்கு ஐந்து கிலோ என்ற அளவில் கலந்து இதனை பூக்கும் பருவத்தில் நாம் தெளிக்க வேண்டும்.
பயிர் அதிசயம் கிடைக்காத பட்சத்தில் அங்கு விவசாயிகள் டிஏபி கரைசல் அதாவது இரண்டு சதம் அதனை நாம் நீரில் கலந்து தெளிக்கலாம். இந்த இரண்டு சதம் டிஏபி கரைசலை கரைப்பதற்கு 10 கிலோ டிஏபியை 25 லிட்டர் தண்ணீரில் கரைத்து அதன் தெளிவை 500 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு எக்டருக்கு நாம் தெளிக்கலாம். இந்த பயிர் அதிசயத்தை தெளிக்கும் பொழுது பயிர் பருவம் அதாவது பூக்கும் பருவத்தில் ஒரு முறையும், அதுவே டிஏபி கரைசலாக இருந்தால் இரண்டு பருவங்களில் அதாவது பூக்கும் பருவம் மற்றும் காய்க்கும் பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் நாம் தெளிக்க வேண்டும்.
உழுந்து பயிரில் பூச்சி மேலாண்மை
அடுத்ததாக பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் பூச்சிகளை பொறுத்தவரையில் இளம் பயிராக இருக்கும் பொழுது சாறு உறிஞ்சது பூச்சிகள் அதிகமாக தென்படும். அசுவினி வெள்ளை ஈக்கள் மற்றும் தண்டுத்துளைப்பான் ஆகியவை அதிகமாக காணப்படும். இந்த அசுவினி பூச்சிகள் கருப்பாக இலைக்கு அடிப்புறமும் கொத்துப் பகுதிகளிலும் அதிகமாக காணப்படும். இதை கட்டுப்படுத்துவதற்கு டைமெத்தோயேட் 500 ml அதாவது 500 மில்லி ஒரு எக்டருக்கு நாம் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.
அடுத்ததாக வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த காலையில் வயலைப் பார்க்கும் பொழுது அதிகமாக காணப்படும். எனவே இந்த வெள்ளை ஈக்கள் மஞ்சள் தேமல் நோய் என்ற ஒரு நோயை பரப்பும் சக்தி கொண்டது. எனவே இதனைக் கட்டுப்படுத்துவதற்கு டைமெத்தோயேட் 500 எம்எல் அல்லது மிடில் டெமட்டான் 500 மில்லி அல்லது ஐந்து சதம் வேப்பங்கொட்டை கரைசல் ஆகிய இதில் எதாவது ஒன்றியை பயன்படுத்தி நாம் கட்டுப்படுத்தலாம்.
அதற்கு அடுத்ததாக வேர் அழுகல் நோய் அதிகமாக காணப்படும். இந்த வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்துவதற்கு கார்பன்டைஸ்ம் ஒரு லிட்டருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து வேர்களின் பக்கத்தில் ஊற்றி அதனை நாம் கட்டுக்குள் கொண்டு வரலாம். எனவே விவசாயிகள் கோடை பருவத்திற்கான உழுந்து ரகங்களை கண்டறிந்து அதனை பயிரிட்டு மகசூலை அதிகரிக்கலாம்.
உங்கள் பார்வைக்கு:
சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் வகைகள்
Post Comment