×

திராட்சை சாகுபடி புதிய தொழில்நுட்பம்

திராட்சை சாகுபடி

திராட்சை சாகுபடி புதிய தொழில்நுட்பம்

Spread the love

திராட்சை சாகுபடி விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான தொழிலாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு போன்ற வெப்ப மண்டல பகுதியில் ஒரு சில இடங்களில் திராட்சை பயிரிட்டு வெற்றிகரமாக வளர்த்து வருகிறார்கள். பொதுவாக திராட்சை நல்ல ஈரப்பதமுள்ள காற்றுள்ள சூழலில் செழித்து வளரக்கூடிய தாவர வகையாகும். இருப்பினும் தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக மாடித் தோட்டங்களில் கூட வெற்றிகரமா இந்த திராட்சையை வளர்த்து வெற்றி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள மலை மண்ணில் இவை செழிப்புடன் வளர்கின்றன. இங்கு நிலவும் மிதமாக வெப்பநிலையும், ஈரப்பதமும் இவை வளர்வதற்கு தேவையான உகந்த சூழலை வழங்குகிறது. உதகமண்டலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக திராட்சை பயிரிடப்படுகிறது.

திராட்சை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்

குறிப்பாக தேனி மாவட்டத்தில் இரண்டு முறையில் திராட்சை பயிரிடப்படுகிறது. ஒன்று பந்தல்கால் முறையிலும், Y வடிவில் இரும்பு அல்லது மரச்சட்டங்கள் அமைத்து திராட்சைக் கொடியை ஏற்றிவிடப்படுகிறது. பந்தல் முறை திராட்சை விவசாயம் என்பது பழைய முறையாகும். மாற்று வடிவமாக Y வடிவ முறை என்பது தற்போது புதிதாக விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட விடயம் ஆகும். இரண்டு முறையிலும் தேனி மாவட்டம் குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வெற்றிகரமாக வளர்த்து வருகின்றனர். தற்போது இந்த Y வடிவ பந்தல் முறைதான் 50 சதவிதமான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

பழைய பந்தல் முறையைவிட புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த Y ஆங்கில் முறை சிறப்பான பலனைத் தருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட 750 முதல் 800 ஹெக்டர் வரையில் திராட்சை விவசாயம் செய்துகொண்டு வருகின்றனர். முக்கிய பணப்பயிராக தேனி மாவட்டத்தில் திராட்சை சாகுபடி விவசாயம் பார்க்கப்படுகிறது.

புதிய தொழில்நுட்பத்தின் பயன்கள்

திராட்சை சாகுபடி

திராட்சை செடிகளை நடவு செய்யும் போது ஒரு வரிசைக்கும் அடுத்த வரிசைக்கும் அதிக அளவு இடைவெளி இருக்கும்படி நடவு செய்ய வேண்டும். அடர் நடவு என்பது கூடாது. காரணம் அடர் நடவு முறை தாவரங்களுக்கு தேவையான சூரிய ஒளியைத் தடுத்துவிடும். மேலும் அவை விளைச்சலை பாதிக்கும். எனவே நடவு செய்யும்போதே போதுமான இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். Y ஆங்கில் முறையில் அதிக இடைவெளி கிடைப்பதால் தாவரங்களுக்கு போதுமான சூரிய ஒளி கிடைக்கிறது. மேலும் தாவரங்களுக்கு இடையே காணப்படும் களைச்செடிகளை சிறிய ரக டிராக்டர்கள் கொண்டு அகற்றலாம். மேலும் பூச்சிக்களை கட்டுப்படுத்த இயந்திரங்களைக் கொண்டு ஸ்பிரேயரில் மருந்துகளை தெளிப்பதற்கும் வசதியாக அமைகிறது.

அதே போல உரம் இடுவதற்கும், நீர் மேலாண்மை செய்வதற்கும், அறுவடை செய்வதற்குமே ஒரு சிறந்த தீர்வாக இந்த Y ஆங்கில் முறை மிகுந்த பயனுள்ள வகையில் அமைகிறது. இந்த முறையால் செடிகளில் ஏற்படும் பாதிப்புகளைக்கூட உடனே அறிந்துகொள்ள முடிகிறது. பழைய பந்தல் முறையில் அமைக்கும்போது மேலிருந்து செடிகளை கவனிப்பது சாத்தியமற்றது. ஏதாவது பூச்சித்தாக்குதல் இருப்பின் அதனை கண்டறிவது கடினமாகும். அதனை கண்டறிவதற்குள் நோயினுடைய தாக்குதல் பெருகிவடும். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பம் நோயினுடைய தாக்குதலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதனை கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது.

இதன் மூலம் பூச்சித்தாக்குதல் மற்றும் பாக்டீரிய மற்றும் வைரஸ் தாக்குதல்களை உடனடியாக கண்டறிந்து தீர்வு காண வசதியாக அமைகிறது. இதுபோல ஆரம்பத்திலேயே செடிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிந்து தடுத்துவிடுவதால் செடிகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் செடிகளின் வளர்ச்சியும், காய்ப்பும் அதிகமாகிறது. விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு அதிகமாகிறது.

திராட்சை விவசாயத்தில் கலை நிர்வாகம் ரொம்ப முக்கியம். இது மாதிரி Y ஆங்கிள் முறையில் விவசாயம் செய்வதால் ஒரு வரிசைக்கும் மற்றொரு வரிசைக்கும் 12 அடி இடைவெளி விடப்படுகிறது. இந்த போதுமான இடைவெளியின் காரணமாக மிக சுலபமாக இயந்திரங்களைக் கொண்டு களைகளை கட்டுப்படுத்தி விட முடிகிறது. அல்லது வேலையாட்கள் கொண்டு களைகளை எளிமையாக கட்டுப்படுத்திவிட முடிகிறது. இதனால் விவசாயிகளுக்கு முழுமையான விளைச்சல் கிடைக்கிறது. பெருமளவு உரம் கொடுப்பது தவிர்க்கப்படுகிறது.

இந்த புதிய நடைமுறையைப் பின்பற்றுவதால் அதிக மகசூலை விவசாயிகள் பெறுகின்றனர். பழைய பந்தல் முறையில் பயன்படுத்தும் போது பூச்சித்தாக்குதலை கண்டறிவதோ, களைகளைக் கட்டுப்படுத்துவதோ மிகச் சிரரமான காரியமாக விவசாயிகளுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் விளைச்சலும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது நல்ல விளைச்சலை விவசாயிகள் பெற்று வருகின்றனர்.

ஒரு ஏக்கருக்கு பழைய முறையை பின்பற்றும்போது 5 முதல் 6 டன் வரைக்கும் மகசூல் கிடைத்தது. ஆனால் தற்போது Y ஆங்கில் முறையில் ஒரு ஏக்கருக்கு 9 முதல் 12 டன் வரைக்கும் விவசாயிகள் மகசூல் எடுத்து வருகின்றனர்.

இதற்காக பூனேவில் உள்ள என்.ஆர்.சி.ஜி யின் விதைகள் பெற்று தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் விவசாயிகள் வெற்றிகரமாக திராட்சை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த புதிய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு பயிற்றுவித்து அனைத்து விவசாயிகளையும் புதிய தொழில்நுட்பத்தில் பயிரிட வைத்து அதிக மகசூல் பெற வைக்க முன்முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய திராட்சை ரகங்கள்

திராட்சை சாகுபடி

இந்த பகுதியில் குறிப்பாக ஆறு ரகங்களில் திராட்சை சாகுபடி நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 90 சதவிகிதம் மஸ்கட் ஹம்பர் என்ற ரகம்தான் அதிகமாக பயிரிடப்படுகிறது. கருப்பு திராட்சை அல்லது பன்னீர் திராட்சை என்று சொல்லக்கூடிய திராட்சை பழங்கள் வகைகள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. மீதமுள்ள 10 சதவிகிதம் மஞ்சரி மெடிக்கா என்கிற ரகம் பயிரிடப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் இந்த திராட்சைகள் ஜூஸ் அல்லது பலரசம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை திராட்சை ரசம் நல்ல இளஞ்சிவப்பு நிறமாக இருப்பதால் நுகர்வோரால் அதிகம் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. இதனால் விற்பனையாளர்களுக்கும் நல்ல இலாபம் கிடைக்கிறது. பெரும்பாலும் இங்கு தயாராகும் திராட்சைப் பழங்கள் சென்னை மற்றும் கோவை போன்ற பெருநகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

மேலும் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. எனவே நல்ல சந்தை வாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக இரண்டாவதாக குறிப்பிட்ட ரகமான மஞ்சரி மெடிக்கா என்ற ரகமும் அதிகமாக விரும்பி நுகர்வோரால் விரும்பப்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கு மட்டுமல்லாமல், திண்டுக்கல் மாவட்டத்திலும், உதகையிலும் இம்மாதிரியான தொழில்நுட்பத்தில் விவசாயம் செய்து நல்ல மகசூலை விவசாயிகள் பெற்று வருகின்றனர்.

உங்கள் பார்வைக்கு:

பலன் தரும் பப்பாளி சாகுபடி


Spread the love

Post Comment

You May Have Missed