×

பருத்தி சாகுபடியில் உள்ள நுட்பங்கள்

பருத்தி சாகுபடியில் உள்ள நுட்பங்கள்

பருத்தி சாகுபடியில் உள்ள நுட்பங்கள்

Spread the love

கருப்பு மண் எனப்படும் கரிசல் மண் பருத்தி சாகுபடிக்கு ஏற்ற மண்ணாகும். பருத்தி பயிர் தமிழ்நாட்டில் பரவலாக பயிரிடப்படும் நல்ல மகசூலைத் தரக்கூடிய ஒரு பயிராகம். பருத்தி பெயர் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுகிறது. பருத்தி சாகுபடியைப் பொறுத்த வரையில் விதை நேர்த்தி, உர மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை ஆகியவற்றை முறையாக தொடர்ச்சியாக கடைபிடிக்கும்போது சிறப்பான மகசூலைப் பெற முடியும்.

கரிசல் மண்ணை தயார் செய்தல்

வருமானத்தை வாரிக் கொடுக்கும் உடுவுத் தொழிலுக்கு அடிப்படை நிலமாகும். நிலத்தை அதன் தன்மைக்கேற்ப உழுது முதலில் நாம் தயார் செய்ய வேண்டும். நிலம் சரியான ஈரப்பதத்தில் இருக்கும் பொழுது ஒன்பது அங்குளம் ஆழ த்தில் மூன்று அல்லது நான்கு முறை புழுதி பட உழவு ஓட்டி நிலத்தி தயார் செய்ய வேண்டும். பின்பு நிலத்தினை சமம் செய்து தேவையான இடைவெளிகளில் விதைகள் அல்லது நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

பாத்தி அமைத்தல்

நிலம் ஈரமில்லாமல் வறண்டு இருக்கும் சமயத்தில் கண்டிப்பாக உழவு ஓட்டக்கூடாது. சாகுபடி செய்யும் பருத்தி ரகங்களுக்கு ஏற்ப பார் அல்லது பாத்தி இடைவெளி கண்டிப்பாக இருக்க வேண்டும். பருத்தி இரகங்களுக்கு குறிப்பாக 75 முதல் 90 சென்டிமீட்டர் இடைவெளியும், மற்ற ரகங்களுக்கு 90 முதல் 128 சென்டிமீட்டர் இடைவெளியும், மானாவரி ரகங்களுக்கு 40 செ.மீட்டர் இடைவெளியும் கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பருத்தி பயிரிடும் நான்கு நிலங்கள்

பருத்தி சாகுபடியில் உள்ள நுட்பங்கள்

தமிழகத்தில் பொதுவாக பருத்தி பயிரிடப்படும் பகுதிகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம். அவை குளிர்கால இரவைப் பகுதி, குளிர்கால நடு பகுதி, கோடை இறவை பகுதி, நெல் தரிசு பகுதி என்று நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். குளிர்கால இரவைப் பகுதி கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆவணி புரட்டாசி பட்டத்திலும், குளிர்கால இரவை பருத்தி பயிரிடப்படுகிறது.

குறிப்பிடத்தக்க ரகங்கள் குறிப்பாக எம்சி 12, எம்சி 13, சுரபி சுமங்கலம் மற்றும் சுவின் ஆகிய ரகங்களும் டிசிஹெச்பி 213 மற்றும் டிசிஹெச் 32 ஆகிய ஓட்டு ரகங்களும் ஏற்றவை ஆகும். குளிர்கால நடு பகுதி தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழையை பயன்படுத்தி புரட்டாசி மாசத்தில் பருத்தி மானாவாரியாக பயிரிடப்படுகிறது. இப்பகுதிகளுக்கு எம்சி 10, கேசி 2, கேசி 3, ரகங்களும் கே 11 போன்ற கருமணி ரகங்களும் ஏற்றவை ஆகும்.

கோடை இரவை பகுதி மதுரை, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, விருதுநகர், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் கோடை இரவைப் பருத்தி மாசி பட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது, இப்பகுதிகளுக்கு எம்சிஓ 5, எம்சி 12, எம் சி 13, சுரபி, எஸ் வி பி ஆர் 2, எஸ் சி பி ஆர் 4 மற்றும் சுப்ரியா ஆகிய ரகங்கள் ஏற்றவை.

நெல் தரிசு பகுதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர், கரூர், கூடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தைமாசி பட்டத்தில் நெல் தரிசு நிலங்களில் பருத்தி பயிரிடப்படுகிறது.

இப்பகுதிகளுக்கு எம்சி 7, எஸ் சி பி ஆர் 3 மற்றும் அஞ்சலி ஆகிய ரகங்கள் ஏற்றவை. 100 கிலோ பருத்தி உற்பத்தி செய்ய ஆறு கிலோ தழைச்சத்து, இரண்டு கிலோ மணிச்சத்து மற்றும் 4.5 கிலோ சாம்பல் சத்தை எடுத்துக் கொள்கிறது. மக்கிய தொழு உரம் 250 கிலோ, மணி மற்றும் 4.5 கிலோ சாம்பல் சத்தை எடுத்துக் கொள்கிறது. கடைசி ஹெக்டருக்கு 12.5 டன் மக்கிய தொழு உரமும், 250 கிலோ வேப்பம் புண்ணாக்கும் கண்டிப்பாக அடி உரம் ஆக இடவேண்டும்.

இதனால் 30 சதவீத மகசூல் அதிகரிப்பதுடன் தண்டு கோன்வண்டு தாக்குதலை நிச்சயம் தவிர்க்கலாம். தனி ரகங்களுக்கு தழைச்சத்து 80 கிலோவும், மணிச்சத்து நாற்பது கிலோவும், சாம்பல் சத்தக்களும் இருக்க வேண்டும். வீரிய ஓட்டு ரகங்களுக்கு 120 கிலோ தலைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்தும், 60 கிலோ சாம்பல் சத்தும் இருக்க வேண்டும்.

சிவில் ரகத்திற்கு 90 கிலோ தழைச்சத்தும், 45 கிலோ மணிச்சத்தும், 45 கிலோ சாம்பல் சத்தம் நிச்சயம் இருக்க வேண்டும். அரைப்பங்கு தழைச்சத்து முழு பங்கு மணி சேர்த்து அரை பங்கு சாம்பல் சத்துக்களை விதைக்கும் பொழுது நடவுசாலில் அடி உரமாக இடவேண்டும். கால்பங்கு தழைச்சத்து மற்றும் கால் பங்கு சாம்பல் சத்தையும் விதைத்த ஐம்பதாவது நாள் ஒரு முறையும் 75 ஆவது நாள் ஒருமுறையும் இடவேண்டும்.

பார்களுக்கு குறுக்கே கயிறு பிடித்து 45 சென்டிமீட்டர் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று விதைகளை மூன்று சென்டிமீட்டர் ஆழத்தில் ஊன்ற வேண்டும். விதை ஜூனியர் கலப்பை கொண்டு இடையே உழவு செய்வதன் மூலம் கலைகளை கட்டுப்படுத்துவதுடன், வேர் பகுதியில் காற்று ஓட்டத்தையும் அதிகப்படுத்த முடியும்.

களைச் செடி மேலாண்மை

பின்பு செடிகளுக்கு இடையில் உள்ள கலைகளை கைகள் மூலம் அகற்றி விட வேண்டும். பிறகு நாட்டு கலப்பை கொண்டு இடை உழவு செய்து மேலும் மேட்டு மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த உடன் நீர் பாய்ச்சுதல் வேண்டும். பிறகு உயிர் தண்ணீர் விதைத்த மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் பாய்ச்சுவது அவசியம். பின் இருபதாவது நாள் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். களை எடுத்து மூன்று நாட்களுக்குப் பிறகு அதாவது 40 அல்லது 45 நாட்களில் ஜூனியர் கலப்பையின் இடை உழவு ஒட்டி மண் அணைத்து தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

நீர் மேலாண்மை

அடுத்து 12 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை மண்ணின் தன்மையை பொறுத்து நீர் பாய்ச்சுதல் அவசியம். 150 நாட்களுக்கு மேல் நீர்ப்பாய்ச்சுதலை தவிர்க்க வேண்டும். குறிப்பாக தழைச்சத்து அதிகம் உள்ள நிலங்களில் செடிகள் தேவைக்கு அதிகமாக வளரும் இதனால் குறித்த காலத்தில் காய்கள் வெடிக்காது. செடிகளும் பூச்சி நோய் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். எனவே விதைத்த 90 நாட்களுக்கு பின் செடிகளில் 15 முதல் 20 கணுக்கள் அல்லது ஐந்து காய்கள் இருக்கும் தருணத்தில் நுனியை கிள்ளி விடுதல் நல்லது.

இதனால் பயிரின் வளர்ச்சி கட்டுப்படுத்துவதோடு காய்கள் பெரிதாக வளர வாய்ப்பு உருவாகும். பூச்சிகளின் தாக்குதல் இல்லாமலேயே உதிரும் காய்களைத் தவிர்க்க லோனோபிஸ் என்ற மருந்தினை 10 லிட்டருக்கு 5 மில்லி என்ற விகிதத்தில் கலந்து சப்பை பருவத்தில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். வானிலை தொடர்ச்சியாக மேகமூட்டத்துடன் இருக்கும் தருவாயில் இதை அவசியம் தடுக்க வேண்டும்.

பயிர்களின் இனத்தூய்மையை பாதுகாத்தல்

ரகங்களின் இனத்தூய்மையை பாதுகாக்கும் பொருட்டு தன் மகரந்த சேர்க்கை உறுதிப்படுத்தும் வகையில் நாளை மலரவிருக்கும் மொட்டுக்களின் நுனிப்பகுதியை மெல்லிய பஞ்சின் உதவியால் கட்டி விடவேண்டும். அந்த மொட்டின் காம்பு பகுதியில் அடையாளத்திற்காக மற்றொரு பஞ்சை சுற்றி விடவேண்டும். இதன் மூலம் தன் மகரந்த சேர்க்கை உறுதிப்படுத்துகிறது. இதனால் அயல் மகரந்த சேர்க்கை தவிர்க்கப்பட்டு ரகங்களின் தூய்மை விதைகளில் பாதுகாக்கப்படுகிறது.

பருத்தியின் தரத்தினை தக்கவைப்பதில் அறுவடையின் பங்கு மிக முக்கியமானது. காலை வேளையில் பணி இல்லாத நேரத்தில் மட்டுமே அறுவடையை தொடங்க வேண்டும். செடியின் அடிப்பகுதியில் முதலில் பருத்தியை பறிக்க வேண்டும். நன்றாக முதிர்ந்த வெடித்த காய்களில் இருந்து தான் பருத்தியினை பறிக்க வேண்டும்.

தூய்மையை பேணுவதற்காக பூச்சி மற்றும் நோயினால் சேதம் அடைந்த தண்டுகள் மற்றும் இலை தழைகளை அவ்வப்போது நீக்க வேண்டும். அனைத்து சேமிக்கும் இடங்களும் சுத்தமானதாகவும், ஈரமற்றதாகவும் இருத்தல் அவசியம். சிமென்ட் தரை இல்லாவிட்டால் தரைப்பகுதியில் பருத்தி துணியை பரப்பவும், அடுத்து சேமிக்கப்பட்ட பருத்தியினை ஈரக்காற்று அல்லது ஈரப்பதம் இல்லாமல் அதனை மூடி பாதுகாக்க வேண்டும்.

உங்கள் பார்வைக்கு:

வெண்டைக்காய் சாகுபடியில் தொழில் நுட்பங்கள்


Spread the love

Post Comment

You May Have Missed