×

ஆமணக்கு பயிரில் பூச்சி மேலாண்மை

ஆமணக்கு பயிரில் பூச்சி மேலாண்மை

ஆமணக்கு பயிரில் பூச்சி மேலாண்மை

Spread the love

எண்ணெய் வித்துப் பயிர்களில் ஆமணக்கு ஒரு முக்கியமான பயிராகும். தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மாவட்டங்களில் மானாவாரியாக இந்த பயிரை பெரும்பாலும் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் நல்ல மகசூல் எடுத்து வருகின்றனர். இந்த ஆமணக்கு பயிரில் ஏற்படும் பூச்சித் தாக்குதல் இவற்றின் மகசூலில் குறிப்பிடத்த சேதத்தை ஏற்படுத்துகிறது. ஆமணக்கு பயிரில் என்ன மாதிரியான பூச்சிகள் தாக்குகிறது என்பதையும், அவற்றைக் கட்டுப்படுத்தி எவ்வாறு நல்ல மகசூல் பெறுவது என்பது குறித்தும் இந்த பதிவில் காண்போம்.

கோடைகாலங்களில் பூச்சிகளின் தாக்குதல்

ஆமணக்கு பயிரிட்ட ஆரம்ப கட்டத்தில் இளம் பருவத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளினுடைய தாக்குதல் அதிகமாக இருக்கும். குறிப்பாக கோடை காலங்களில் இந்த சாறு உறுத்தும் பூச்சிகளின் தாக்குதல் ஆமணக்கு செடிகளில் அதிகமாகவே இருக்கும். சாறு உறிஞ்சும் பூச்சிகளில் குறிப்பாக பச்சை தத்துப்பூச்சி, வெள்ளை தத்துப்பூச்சி மற்றும் இலைபேன் போன்றவை இலைகளையும், இதன் பூக்களையும் அதிகமாக தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.

சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல்

இந்த சார் உறிஞ்சும் பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சி விடுவதால் அவை ஊட்டச்சத்துக்களும், பச்சையமும் இன்றி வாடிப் போய்விடுகின்றன. ஆரம்ப கட்டத்தில் இலைகள் மஞ்சள் நிறத்தில் வெளுத்து போனது போன்று தோற்றமளிக்கும். காரணம் செழிப்பாக இருக்க வேண்டிய இலைகளில் உள்ள சாற்றை எல்லாம் உறிஞ்சி அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.

இலைகளில், பூக்கள் மற்றும் காய்களில் ஏற்படும் பாதிப்பு

ஆமணக்கு பயிரில் பூச்சி மேலாண்மை

இலையின் அடிப்பாகத்தில் தான் இந்த சாற்றை உறிஞ்சும் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன. இதனால் இயல்பாக இலைகைள் அனைத்து சத்துக்களையும் இழந்து மஞ்சள் வண்ணத்தை அடைகின்றன. ஒரு மாதிரி வெளுத்துப்போனது போன்ற தோற்றத்தையும் இலையின் மிருது தன்மையையும் இழந்து விடுகிறது. இலையானது முரடு முரடாக சுருங்கி இலை ஓரங்கள் எல்லாம் காய்ந்து விழுந்து பின்பு முழு தாவரமும் தங்கள் இயல்பான தோற்றத்தை இழந்து காய்ந்து விடுகிறது.

சாரு உறிஞ்சும் பூச்சிகளின் தொடர்ச்சியான தாக்குதலினால் இலைகள் பழுத்து வயல் முழுவதும் சிதறி கிடக்கும். இதுபோன்ற அறிகுறிகள் முழுவதும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் இருப்பதை உறுதி செய்கிறது. ஆரம்ப நிலையில் இலைகளின் கீழ் பகுதியில் பார்த்தோம் என்றால் நிறைய இடங்களில் பச்சை தத்துப்பூச்சிகள் ஒன்றிரண்டு தத்தி தத்தி நகர்ந்துகொண்டு இருக்கும். பொதுவாக கோடை காலங்களில் இதன் தாக்குதல் அதிகமாகவே இருக்கும்.

இந்த பூச்சிகளினுடைய தாக்குதலினால் இலைகள் ஓரமெல்லாம் சுருண்டு காணப்படும். இலைகள் மற்றும் பூக்களில் இந்த பூச்சிகள் நகர்வதை அதிகமாக பார்க்க முடியும். பொதுவாக பெண் பூச்சிகள் பூங்கொத்துகளில் நிறைய காணப்படலாம். இளமையான அந்துப்பூச்சிகள் மஞ்சள் நிறத்திலும், வளர்ச்சியடைந்த பூச்சிகள் கருப்பு நிறத்திலும் காணப்படுகிறது. இப்பூச்சித் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இலைகள் சுருண்டு சுருங்கி கருகி போய்விடும். இந்த பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகும் போது பூக்கள் எல்லாம் கருகி கொட்ட ஆரம்பித்துவிடும்.

பூச்சிகளை இனம் காணுதல்

இந்த பூச்சிகளின் தாக்குதல் கடந்த வருடங்களை காட்டிலும் இந்த வருடத்தில் மிக அதிகமாகவே இருக்கிறது. ஒரு இலையில் 200 பக்கம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக காய்களில் அல்லது பூங்கொத்துகளில் 200 லிருந்து 400 வரைக்கும் ஒரே கொத்திலே பெண் பூச்சிகளுடைய தாக்குதல் அதிகமாக காணப்படுவது இந்த வருடம்தான்.

இதுபோன்ற தாக்குதல் உள்ளபோது உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தற்போது பார்ப்போம். இந்த பெண் பூச்சிகள் அப்படியே இடம்பெயர்ந்து மற்ற ஆரோக்கியமான தாவரங்களையும் தாக்குகின்றன. ஒரு வயலில் இப்பூச்சிகள் காணப்பட்டால் மிக விரைவாக அடுத்த நிலங்களுக்கும் பரவி பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன.

பூச்சிகளின் பாதிப்பைக் கண்டறிதல்

இந்த வெள்ளை ஈக்கள் ஒரே இலையில் கிடத்தட்ட 30 முதல் 40 வெள்ளை ஈக்கள் வந்து காணப்படுகின்றன. இந்த இலைகள் அதாவது பாதிக்கப்பட்ட இலைகள் சற்று முருகலாகும் ஆரம்ப கட்டத்துல இப்படி இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சி விடுவதால் இலைகள் வெளிறி இறுதியில் கருகி கொட்ட ஆரம்பித்துவிடும்.

மானாவாரி பயிர்களில் இந்த வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதே சமயம் கோடை காலங்களில் இப்பூச்சியினுடைய தாக்குதலும் மிக அதிகமாகவே காணப்படுகின்றன. பூச்சிகள் என்று குறிப்பிடும்போது பச்சை தத்துப்பூச்சி, இலைப்பேன், பூப்பேன் அதே மாதிரி வெள்ளை தத்துப்பூச்சி இந்த நான்கும் ஆமணக்கு தாவரங்களில் வந்து மகசூல் இழப்பு அதிகமாக ஏற்படுத்துகின்றன.

ஒருங்கிணைந்த பூச்சிகள் மேலாண்மை

இவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இப்போது நம்முள்ள முக்கிய சவாலாகும். தற்போது நமது நிலங்களில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அதிக அளவு இரசாயன பூச்சிக்கொல்லிகளையே நாம் நம்பி இருக்கிறோம். மண்ணை பாதிக்காத சுற்றுச்சூழலைப் பாதிக்காத விஷமற்ற அல்லது நச்சுத்தன்மையற்ற ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மை என்பதுதான் நாம் தொடர்ச்சியாக விவசாய பெருங்குடி மக்களுக்கு நாம் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு பிரச்சாரமாகும்.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் முதல் கட்டமாக பூச்சிகளை பற்றிய முழுமையான அறிவை தெரிந்து வைத்திருக்க வேண்டும். நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம் நமது நிலத்தில் என்ன பூச்சி வருது, அது எப்ப வருது எந்த தருணத்தில் வருகிறது, அப்போது என்ன மாதிரி அதாவது பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் மற்ற வேறு வகையான என்னென்ன மாதிரி பூச்சி கட்டுப்பாடு நடவடிக்கை இருக்கு என்பது பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மஞ்சள் ஒட்டுப் பொறிகள் அமைத்தல்

நமது விவசாய நிலங்களில் மஞ்சள் ஒட்டும் பொறி அட்டைகளை சரியான நேரத்தில் சரியான அளவில் பயன்படுத்துவது நமது நிலங்களில் ஓரளவிற்கு இயற்கையாக தீமை செய்யும் பூச்சிகளிலிருந்து நமது பயிர்களை பாதுகாக்கும் சிறந்த வழிமுறையாகும். இந்த மஞ்சள் ஒட்டும் பொறி மஞ்சள் வண்ணத்தில் இருக்கும்.

இந்த மஞ்சள் வண்ணம் வெள்ளை அல்லது பச்சை தத்துப்பூச்சி உள்ளிட்ட பல்வேறு பூச்சிகளை கவரும் திறன் கொண்டது. இந்த மஞ்சள் வண்ண அட்டடையில் இரண்டு பக்கமும் இதுபோன்ற பிசுபிசுப்பான ஒட்டும் தன்மையுடைய பசை இருக்கம். இதுபோன்ற மஞ்சள் ஒட்டும் பொறியை வைத்து நாம் வெள்ளை மற்றும் பச்சை தத்துப்பூச்சிகளை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம்.

மஞ்சள் வண்ணத்தால் ஈர்க்கப்படும் இதுபோன்ற பூச்சிகள் இந்த பசையுள்ள அட்டையில் ஒட்டிக்கொள்கின்றன. இதனால் அவற்றால் அடுத்து பறக்க முடியாது அதே சமயத்தில் அசையவும் முடியாது. இதனால் இப்பூச்சிகள் ஒருசில நாட்களில் இறந்துபோய்விடும். ஒரே அட்டையில் ஆரம்பத்தில் ஒருசில பூச்சிகளின் நடமாட்டம் அல்லது மஞ்சள் அட்டையில் ஒட்டியுள்ள பூச்சிகளின் எண்ணிக்கை வைத்தே அதன் எண்ணிக்கை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நாம் கண்டறிந்துவிட முடியும்.

ஒரே இலையில் 60 முதல் 70 பூச்சிகள் வந்து ஒட்டி இருக்கின்றன என்று வைத்துக்கொண்டால் இதை இப்படியே விட்டுவிட்டால் நாளடைவில் இதன் செயல்பாடு குறைந்துவிட வாய்ப்புண்டு. எனவே இந்த பூச்சிகளை ஒரு சிறிய துணிகொண்டு துடைத்து எடுத்துவிட்டால் இது அதிகமாக பூச்சிகளை மீண்டும் கவரும். இது தொடர்ச்சியாக ஒன்று முதல் இரண்டு மாதங்கள் இந்த மஞ்சள் ஒட்டும் அட்டை பொறிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

ஒட்டுப்பொறிகளை மீண்டும் பயன்படுத்தும் வழிகள்

இதில் உள்ள ஒட்டுப்பசை தீர்ந்துவிட்டால் இதில் மேலும் இந்த ஆமணக்கு எண்ணெயை தடவி மீண்டும் பயன்படுத்தலாம். இந்த மஞ்சள் ஒட்டும் அட்டைப் பொறி உண்மையிலேயே பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் ஒரு சிறந்த மாற்று பூச்சி மேலாண்மை முறையாகும்.

பயிரிலிருந்து ஒரு அரை அடிக்கு கொஞ்சம் மேல இருக்கிற மாதிரி இந்த மஞ்சள் அட்டைகளை வைத்துவிட்டால் பூச்சிகள் அதிக அளவு கவர்ந்து இதில் ஒட்டிக்கொள்ளும். ஆரம்ப கட்டத்துல இந்த மாதிரி பொறிகளை வைக்கும்போது பூச்சி இருக்கிறதா இல்லையா என்ற கண்காணிப்பதற்கும் இந்த ஒட்டுப்பொறிகள் பயன்படுகின்றன.

எல்லா பயிரையும் நாம் ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே இருப்பதைக் காட்டிலும் இது மாதிரி ஒரு ஐந்து இடங்களில் ஒரு பெரிய வயலில் வைக்கலாம். அதன்பின் நாம் வந்து நேராக பொரியை பார்க்கலாம். இல்லை ஒன்னு ரெண்டு பூச்சி ஓட்டிக்கொண்டு இருக்கிறது என்றால் பிரச்சனை இல்லை. எப்பொழுது இதில் வெள்ளை தத்துப்பூச்சிகளுடைய தாக்குதல் அதிகமாக இருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ள முடியும்.

பிறகு ஒரு தாக்குதல் வந்துவிட்டது என்றால் இந்த மாதிரி ஒட்டும் பொறிகள் ஒரு ஏக்கருக்கு 20 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் இதுபோன்று துணிகளைக் கொண்டு எடுத்துவிடும்போது இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக இந்த பொறிகளை நாம் பயன்படுத்த முடியும். இதனால் எல்லா வகையான சாறு உறிஞ்சு பூச்சிகளும் வந்து கட்டுப்பாடுகள் வருகிறது.

வேம்பு கரைசல் பயன்படுத்துதல்

இந்த மஞ்சள் ஒட்டும் பொறிகளை வைத்தும் பூச்சிகளை கட்டுக்குள் வரவில்லை என்றால் அடுத்து வேம்பு சார்ந்த தாவர பூச்சி விரட்டிகளை நாம் பயன்படுத்தலாம். இந்த வேம்பு கரைசலில் வேப்ப எண்ணெய் மூன்று சதவிகிதம் அல்லது வேப்பங் கொட்டை கரைசல் ஐந்து சதவிகிதம் இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி இந்த கரைசலை பாதிக்கப்பட்ட தாவரங்களில் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். மேற்கண்ட வழிமுறைகளில் ஆமணக்கு பயிர்களைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை வெகுவாக கட்டுப்படுத்தி பயிர்களை பாதுகாத்து அதிக இலாபம் ஈட்ட முடியும்.

உங்கள் பார்வைக்கு:

கரும்பு பயிர்களில் மாவு பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்


Spread the love

Post Comment

You May Have Missed