கண்வலிக் கிழங்கில் பூச்சிகள் மேலாண்மை
தமிழ்நாட்டில் குறிப்பாக திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 5134 ஹெக்டேர் பரப்பளவில் இந்த கண்வலிக் கிழங்குகள் பயிரிடப்படுகின்றன. கிட்டத்தட்ட 600 இருந்து 700 மெட்ரிக் டன் ஒவ்வொரு வருடமும் விவசாயப் பெருங்குடி மக்களால் அறுவடை செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனுடைய காய்ந்த விதைகள் அதிக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை.
தமிழ்நாட்டின் மாநில மலர்
கண்வலிக்கிழிங்கு எனப்படும் இந்த தாவரத்தில் மலர்தான் தமிழ்நாட்டின் மாநில மலர் ஆகும். இந்த மலர்களுக்கு செங்காந்தள் மலர் என்று பெயர். இவற்றின் கிழங்குகள் மருத்துவ குணம் உடையவை. இருப்பினும் இதன் விதைகள் அதிக அளவில் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
இதிலிருந்து கிடைக்கூடிய வேதிப்பொருள்தான் கொன்ச்சிசைன் என்று சொல்லுவார்கள். இந்த கொன்ச்சிசைன் என்ற வேதிப்பொருளைக் கொண்டு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான மருந்தினை பல வளர்ந்த நாடுகளில் உற்பத்தி செய்கிறார்கள். தமிழ்நாட்டின் மிக முக்கிய பொருளாதார மிக்க மற்றும் விவசாயிகளுக்கு இலாபகரமாக பயிராக இந்த கண்வலிக்கிழங்கு அறியப்படுகிறது.
கண்வலிக்கிழங்கினை பாதிக்கும் புழுக்கள்
லில்லி புழுக்களினால் ஏற்படும் பாதிப்புகள்
இந்த வகையான தாவரங்களில் ஆரம்ப காலகட்டத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் லில்லி புழுக்கள் என அழைக்கப்படும் அதாவது கருப்பு நிறத்தில் காணப்படும் ஒரு புழுக்கள் கண்வலிக்கிழங்கின் இலைகளை தின்னு வாழக்கூடிய பூச்சிகள் ஆகும். இவை பெரிய அளவில் இத்தாவரத்திற்கு சேதத்தை ஏற்படுத்துகின்றன.
பூச்சிகள் என்று குறிப்பிடும்போது இரண்டு வகையான பூச்சிகள் தாவரங்களை வெகுவாக பாதிக்கின்றன. முதலாவதாக சாறு உறிஞ்சும் பூச்சிகள் இரண்டாவது இலைகள் மற்றும் தண்டுகளை மென்று உண்ணும் பூச்சிகள் ஆகும்.
இவற்றில் இத்தாவரத்தின் ஆரம்ப நிலைகளில் குறிப்பாக லில்லி புழுக்கள் உடைய தாக்குதல் அதிகமாக காணப்படுவதால் அந்த பயிரே முழுவதுமாக சேதத்துக்கு உட்படக்கூடிய அளவுக்கு பயிரைத் தாக்கி அழிக்கின்றன. காரணம் இப்புழுக்கள் முழுவதுமாக இலைகளை அவற்றின் நரம்புகளை மட்டும் விட்டுச் சென்று மற்ற பகுதியில் அனைத்தையுமே அது உண்டு வாழக்கூடிய ஒரு பூச்சிகளாக உள்ளன.
இவற்றின் லார்வா நிலையில் கண்வலிக் கிழங்கின் இலையிலுள்ள பச்சயத்தை மட்டும் சுரண்டி உண்ணக்கூடியது. அதே சமயத்தில் இவற்றின் மூன்றாவது நிலையான புழுக்கள் எல்லாம் அதாவது வளர்ந்த நிலை புழுக்கள் எல்லாம் இலையினுடைய ஓரம் மற்றும் இலையினுடைய நடு நரம்பை மட்டும் விட்டுவிட்டு மீதியுள்ள அத்தனை பகுதியும் உண்டு வாழக்கூடிய ஒரு புழுவினமாக உள்ளது.
இவ்வகை பூச்சிகள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த கண்வலிக் கிழங்கை பயிரிட்ட அனைத்து விவசாயிகளும் சந்திக்கும் ஒரு தீவிர பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இந்த வகை புழுக்கள் இலையினுடைய அடிப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு பத்தில் இருந்து 15 வரையிலான முட்டைகளை இடுகின்றன. அதிலிருந்து வரக்கூடிய அந்த சிறிய லார்வாக்கள் இலைகளில் உள்ள பச்சையத்தை உண்டு தாவரத்திற்கு ஒளிச்சேர்க்கை செய்ய உதவும் காரணிகளை அழித்துவிடுவதால் தாவரங்களின் வளர்ச்சி ஆரம்ப நிலையிலேயே தடுத்துவிடுகிறது.
தாய் புழுக்கள் இலையை ஒட்டுமொத்தமாக உண்டு விடுவதால் செடிகள் முழுவதுமா காய்ந்து விடுகின்றன. இதனை தடுக்க விவசாயிகள் இப்புழுக்களின் நடமாட்டத்தை கண்டறிந்தவுடன் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான பூச்சிகள் மேலாண்மை உத்திகளை கையாள வேண்டும்.
காவடிப் புழுக்களின் பாதிப்பு
கண்வலிக் கிழங்கினைப் பாதிக்கும் இரண்டாவது புழு வகை காவடி புழுக்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வகையான புழுக்களும் இலைகளை உண்டு வாழக்கூடியதுதான். இந்த காவடிப்புழுக்களும் இலைகளுக்கு அடியில்தான் முட்டைகளை இடுகிறது. அதிலிருந்து வரக்கூடிய லார்வாக்கள் எல்லாமே அந்த தாவரத்தின் இலைகளின் பச்சையத்தையும் அந்த இலைகளுடைய நுனிப்பகுதியும் முழுவதுமாக கடித்து உண்ணும் தன்மை உடையவை. கண்வலிக்கிழங்கில் ஆரம்ப நிலையில இதனுடைய முதல் மற்றும் இரண்டாம் நிலை புழுக்ககள் எல்லாம் இலைகளை சுரண்டியும் அதேபோல முதிர்ந்த புழுக்கள் எல்லாம் இலைகளை முழுவதுமாக கடித்து சேதத்தை ஏற்படுத்துகின்றன.
இதுபோல இலைகளில் பச்சையம் குறைவதால் ஒளிச்சேர்க்கைக்கு தேவையான பச்சையம் இல்லாமல் தாவரத்தின் ஆரம்ப நிலையிலே அப்பயிர்கள் போதுமான வளர்ச்சி இல்லாமலும், முற்றிலுமாக காய்ந்து விடுகிறது. இதனை கட்டுப்படுத்த இப்புழுக்களின் தாக்கத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்.
இலைப்பேன் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகள்
அடுத்து மூன்றாவதாக சாறு உறிஞ்சும் பூச்சிகள் என அழைக்கப்படும் இலைப்பேன் பூச்சிகள் முழுவதுமாக இலையினுடைய அடிப்பரப்பில் அமர்ந்து கொண்டு கூட்டம் கூட்டமாக அதனுடைய இளம் குஞ்சுகள் தாவரத்தின் இலைகளில் உள்ள பச்சயத்தை சுரண்டி சாப்பிடக்கூடிய தன்மை கொண்டது.
இரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டின் எதிர்மறை விளைவுகள்
எனவே இதுபோன்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பெரும்பாலும் செயற்கையான இரசாயன உரங்களையே நம்பியுள்ளனர். பூச்சிகளை கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் விவசாய நிலங்களில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் இவற்றின் விதைகளிலும், மண்ணில் இருக்கும் இவற்றின் கிழங்குகளிலும் இதன் பாதிப்புகள் உண்டாகின்றன. இதனால் இந்த கிழங்குகள் மற்றும் விதைகள் தரமற்றவை என்று வெளிநாட்டினரால் இவை விரும்பப்படுவதில்லை. எனவே விவசாயிகளுக்கு முதலுக்கே மோசம் வந்ததுபோல் ஆகிவிடுகிறது.
இயற்கையான பூச்சிகள் மேலாண்மை
எனவே இரசாயன பூச்சிக்கொல்லி அல்லாது இயற்கையாக எவ்வாறு இவற்றைக் கட்டுப்படுத்துவது என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியின் உடைய பலனாக இந்த புகையிலைப் புழுக்கள், காவடிப் புழுக்கள், லில்லி புழுக்கள் மற்றும் இலைப்பேன் போன்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்த அவற்றின் பெரும்பாலான பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் நிலை மண்ணில்தான் வளர்கின்றன. எனவே மண்ணில் கிட்டத்தட்ட ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கினை கிழங்கு நடவு செய்வதற்கு முன்னதாக கொட்டி உளவு ஓட்டி மண்ணை தயார் செய்ய வேண்டும். இதனால் இந்த பூச்சிகளின் கூட்டுப்புழு பருவம் தடுக்கப்படுகிறது.
இது முதல் நிலை கட்டுப்பாடு ஆகும். இரண்டாவதாக எடுத்த எடுப்பிலேயே நாம் பூச்சிக்கொல்லிகளை எடுத்து பயன்படுத்தக்கூடாது. அதற்காக வேம்பு சார்ந்த பூச்சிவிரட்டிகளை பயன்படுத்தி இந்த பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். அதாவது இப்பூச்சிகள் முட்டையிடுவதை தவிர்க்கக்கூடிய பூச்சிவிரட்டிகள் இன்றைக்கு நடப்பில் கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக அசாடிராட்டின் என்று சொல்லக்கூடிய அந்த வேம்பினத்தைச் சார்ந்த ஒரு பூச்சிவிரட்டி ஒரு சதவீதம் அதாவது கிட்டத்தட்ட 1 1/2 ml ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து அதை ஆரம்ப நிலையில் பயன்படுத்தினால் நல்ல பலன் தரும்.
பிறகு இயற்கை சார்ந்த சூழலில் பைசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்று சொல்லக்கூடிய பாக்டீரியாக்கள் புழுக்களின் முட்டைகளையும், லார்வாக்களையும் தாக்கி அழிப்பதில் வல்லமையோடு செயல்படுகின்றன. இதுபோன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்களை இவற்றைக் கட்டுப்படுத்துவதில் பயன்படுத்தலாம்.
இந்த வகை பாக்டீரியாக்களை 750 கிராம் எக்டேருக்கு என்ற அளவில் பயன்படுத்துவது நல்ல பலனை தரும். இதுபோன்று இயற்கையான முறையில் எந்த வகையிலும் தாவரத்தை பாதிக்காத அதன் தரத்தினை பாதிக்காத இயற்கை சார்ந்த பூச்சி விரட்டிகளை பயன்படுத்துவது நல்ல பலனை தரும். அதே சமயத்தில் நல்ல தரமான விதைகளும் கிழங்குகளும் கிடைக்கும் எப்படி என்றால் வெளிநாட்டினர் விரும்பு வகையில் ஏற்றுமதி செய்யும் வகையில் தரமான பொருள்களாக இவை கிடைக்கும்.
இந்த வகையான ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு குறிப்பாக மேலே குறிப்பிட்ட நான்கு பூச்சிகளுமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். விவசாயிகள் நல்ல அறுவடையையும், இலாபத்தையும் பார்க்க முடியும்.
இதுபோன்று நடைமுறையில் உள்ள இயற்கை சார்ந்த பூச்சிவிரட்டிகளை பயன்படுத்தி கிட்டத்தட்ட 400 இருந்து 450 கிலோ அளவிற்கு விதைகளை உற்பத்தி செய்ய முடியும். இதனால் விவசாயிகள் செய்த முதலீட்டை விட கூடுதலான இலாபத்தினை அடைய முடியும். கிட்டத்தட்ட அதனுடைய விதையினுடைய உற்பத்தி அளவு 450 கிலோ பக்கம் ஒரு ஏக்கருக்கு ஒரு அதிகமா இதை சாகுபடி செய்ய முடியும். அது மட்டும் இல்லாமல் எஞ்சிய நச்சுத்தன்மை அற்ற ஒரு உற்பத்தியை கண்வள்ளிக்கிழங்கு விதையில நாம் கொண்டுவர முடியும்.
இந்த வகையில் திண்டுக்கள் மற்றும் கரூர் பகுதி விவசாயிகள் இந்த நடைமுறையை பின்பற்றி ஒருங்கணைந்த பூச்சிக் கொல்லி மேலாண்மையை பின்பற்றி நல்ல தரமான விதைகளையும், மகசூலையும் பெற முடியும். இதுபோன்ற நடைமுறை உத்திகளை விவசாயிகள் பயன்படுத்தும்போது கண்வலிக்கிழங்கு ஒரு வெற்றிகரமான விவசாயப் பயிராக தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொள்ளும்.
உங்கள் பார்வைக்கு:
நெற்பயிரைத் தாக்கும் ஆனைக் கொம்பன் பூச்சிகள்
Post Comment