×

காய்கறி பயிர்களில் ஒட்டு கட்டும் புதிய தொழில்நுட்பம்

காய்கறி பயிர்களில் ஒட்டு கட்டும் புதிய தொழில்நுட்பம்

காய்கறி பயிர்களில் ஒட்டு கட்டும் புதிய தொழில்நுட்பம்

Spread the love

காய்கறி பயிர்களில் ஒட்டு கட்டுதல் என்பது பூச்சிநோய் தாக்காத ஒட்டும் பண்புடைய ஒரெ இனமான ஒட்டுச்செடிகளைக் கொண்டு அதே இனத்தைச் சேர்ந்த அதிக மகசூல தரக்கூடிய நாம் விரும்பும் பண்புகளையுடைய தாய் செடியை ஒட்டுக்குச்சியாக பயன்படுத்தி ஒட்டுக்கட்டுதல் ஆகும். இவ்வாறு ஒட்டுக் கட்டிய நடவு செய்யும்போது ஒட்டுச் செடியினுடைய தரம் மற்றம் பண்புகளும் மற்றும் வேர் செடியினுடைய வறட்சியைத் தாங்கும் பண்பும் நூற்புழு மற்றும் வேரின் மூலம் பரவும் நோய்களுக்கு எதிர்ப்புச் சக்தியும் ஒருங்கே கிடைக்கின்றன.

இதற்கு உதாரணமாக ஒட்டுக் கத்திரி என்பது கத்திரியின் இனமான சுண்டையக்காய் செடியை வேர்ச்செடியாகவும் நமக்கு தேவையான கத்தரி ரகத்தை தேர்வு செய்து அதிலிருந்து இளம் தளிர்ச்செடியினை கத்தரித்து எடுத்து ஒட்டுச்செடியாகவும் வைத்து இணைப்பதே ஒட்டுக் கட்டுதல் எனப்படும். இளம் தளிர் ஒட்டுக்குச்சிகளை அதிக அளவு மகசூல் தரவல்ல நாம் விரும்பும் செடிகளில ரகங்களை தேர்வு செய்து அதிலிருந்து விதைகள் எடுத்து அதனை விதைத்து அதிலிருந்து பெறப்படும் இளம் தளிர் உள்ள சிறிய செடிகளை தேர்வு செய்து ஒட்டுக் கட்டுவதற்கு பயன்படுத்துவர்.

ஒட்டுக் கட்டுவதனால் ஏற்படும் பயன்கள்

நீண்ட ஆணிவேர் கொண்ட வேர்ச்செடி வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மாறும் தட்ப வெப்ப சூல்நிலையைத் தாங்கி வளரக்கூடிய திறன் உடையது. மண் வளி தோன்றக்கூடிய வாடல்நோய் மற்றும் நூற்புழு தாக்குதலைத் தாங்கி வளரக்கூடியது. அதிக அளவில் மகசூல் தரக்கூடியது.

வேர்ச்செடியை தயார் செய்தல்

ஓர் அகலமான நெகிழி தட்டில் முக்கால் பாகம் தென்னை நார் கழிவினை நிரப்பிக் கொள்ள வேண்டும். நன்கு பழுத்த கசப்பில்லாத நன்கு வளர்ச்சியுடைய சுண்டைக்காய் தாய்ச் செடியிலிருந்து பழங்கள் எடுத்து அதிலிருந்து விதைகள் சேகரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனை 24 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு விதைப்பதற்கு பயன்படுத்தலாம். விதைகளை ஒரே சீராக தூவி பின்பு அதன் மீது மக்கிய தென்னை நார் கழிவுகை தூவி பூவாளிக் கொண்டு காலையும், மாலையும் என இரண்டு வேலையும் தண்ணீர் விட வேண்டும். விதைத்திலிருந்து 15 நாட்கள் முதல் விதைகள் முளைத்து வரும். பின் 15 நாட்கள் கழித்து நாற்றுகளைப் பறித்து மண், மணல் மற்றும் தொழுஉரம் ஆகியவை சம அளவில் கலந்து நிரப்பப்பட்ட பாலீத்தின் பைகளுக்கு செடியை மாற்ற வேண்டும். அல்லது 50 குழிகள் கொண்ட குழித்தொட்டில் மக்கிய தென்னை நார் கழிவினை நிரப்பி நாற்றுகளை நட வேண்டும்.

நடவு செய்த ஒரு வாரம் கழித்து நீரில் கரையும் உரமான All19 என்ற உரத்தினை ஒரு லிட்டருக்கு 5 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பின்பு 15 முதல் 20 நாட்களுக்கு செடிகள் ஒட்டுக் கட்டுவதற்கு தயாராகிவிடும். விதைத்ததிலிருந்து 45 அல்லது 50 நாட்களில் செடியை ஒட்டுக்கட்டலாம்.

 ஒட்டு மேல் செடி தயார் செய்தல்

காய்கறி பயிர்களில் ஒட்டு கட்டும் புதிய தொழில்நுட்பம்

ஒட்டுக்குச்சி செடிக்கு நமக்கு தேவையான ரகத்தையோ அல்லது வீரிய ஒட்டு ரகத்தையோ தேர்வு செய்யலாம். அதன் விதைகளை வேர்ச்செடி தயார் செய்தது போன்று குளித்தட்டுகளில் விதைத்து தயார் செய்யலாம். ஒட்டுக் கட்டும் தொழில்நுட்பத்தில் குறிப்பாக சுண்டைக்காய் செடிகள் விதைத்த 15 நாட்களுக்கு பிறகு விதைக்க வேண்டும். விதைத்து 25 நாட்கள் கழித்து இந்த கத்திரி செடிகள் ஒட்டுக்கட்டுவதற்கு ஏற்ற தடிமனில் அமையும்.

வேர்க்குச்சிகளும் ஒட்டு மேல் செடியும் நான்கு இலைகள் விட்ட நிலையில் வேர்ச் செடியின் மேல் பக்கத்தில் 10 செ.மீ விட்டு கூர்மையான, சுத்தமான கத்தி அல்ல பிளேடு கொண்டு கத்தரித்து எடுக்க வேண்டும். பின் கத்தரித்த வேர்ச்செடியில் நீளவாக்கில் ஒரு சிறு பிளவு ஏற்படுத்த வேண்டும். பின்னர் அதே பருமன் உள்ள இளம் தளிர் குச்சியின் வேரை நீக்கிவிட்டு தண்டின் இலைகைளை இரண்டு இலைகள் விட்டு இதர இலைகளை நீக்கிவிட்டு வி வடிவத்தில் இரண்டு புறமும் சீவி வேர்க்குச்சியின் பிளவுப்பட்ட பகுதியில் நுழைத்து பிளாஸ்டிக் இணைப்பான் கொண்டு இணைக்கலாம். அல்லது ஒரு சிறிய உறிஞ்சுக்குழாயை வேர்க்குச்சிக்குள் நுளைத்து அதனை மூடி இவ்வாறு ஒட்டுக்கட்டுதலை பாதுகாத்துக்கொள்ளலாம். மேலும் அதனை ஒரு சிறிய பாலீத்தின பையைக் கொண்டு மேல்புறமாக மூடி அதனை நிழல் வலையில் வைக்கலாம். அல்லது வெயில் படாத நிழற்பாங்கான பகுதியில் ஒரு வாரம் வைக்க வேண்டும்.

பின்பு உரையை எடுத்துவிட்டு மீண்டும் ஒருவாரம் நிழல் வலைக்குள் வைக்கவேண்டும். இந்த ஒட்டுச்செடியானது 15 முதல் 20 நாட்களில் நடவுக்கு தயார் செய்ய வேண்டும். பின் இதனை எடுத்து நடவு செய்வதற்கு பயன்படுத்தலாம். நடவு செய்வதற்கு முன் அதன் மேல் உள்ள பாலீத்தீன் பைகளை நீக்கிவிட வேண்டும். உறிஞ்சுக்குழாய் நீக்க வேண்டிய அவசியம் இல்லை. செடிகள் வளர்ச்சியடைந்து உறிஞ்சுக்குழாய்கள் தானாகவே உறிந்து விழுந்துவிடும்.

அவ்வவ்போது போத்துக்கு கீழே கிளைகள் தோன்றும். இதனை உடனடியாக நீக்கி விட வேண்டும்.

நிலத்தை தயார் செய்தல்

நடவு செய்யவேண்டிய நிலத்தை நான்கு முதல் ஐந்து முறை நன்கு உழவு ஓட்ட வேண்டும். அதற்கு முன் மக்கிய தொழு உரம் சேர்த்து நன்கு கலக்கிவிட வேண்டும். ஒட்டுக்கத்திரி செடிக்கு 250 கிலோ தழைச்சத்து, 187 கிலோ மணிச்சத்து, மற்றும் 125 கிலோ சாம்பல் சத்து தேவைப்படுகிறது. இதில் 50 சதவிகித தலைச்சத்தான 125 கிலோவையும், மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்தினை அடி உரமாக இட வேண்டும். தயார் செய்த நடவு வயலில் ஒரு மீட்டர் இடைவெளியில் ஒரு கன அடி அளவுள்ள சிறுகுழிகள் எடுக்க வேண்டும். நன்கு ஒட்டுப்பிடித்த ஒட்டுக்கத்திரி செடிகளை இக்குழிகளில் நன்கு நடவு செய்ய வேண்டும்.

ஒட்டுச்செடிகளை ஜூன், ஜூலை மற்றும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடலாம். ஒட்டுச்செடியை நடவு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பிறகு 7 நாட்கள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 35 முதல் 40 நாட்களில் முதல் அறுவடை ஆரம்பிக்கும். காய்கள் பிஞ்சாக விதைகள் முற்றுவதற்கு முன்பாக அறுவடை செய்ய வேண்டும். கத்திரிக்காய்களை மூன்று முதல் நான்கு நாள்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். ஒரு செடிக்கு சுமார் 10 கிலோ வரை ஆறு மாதங்களில் மகசூலாக கிடைக்கும். ஒரு ஹெக்டருக்கு 70 டன்கள் மகசூலாக பெறலாம். ஒட்டுச்செடியை ஐந்து மாதங்களுக்கு பிறகு மறுதாம்பு செய்ய வேண்டும். ஒட்டுச்செடியை தரையிலிருந்து 15 முதல் 20 செ.மீட்டருக்கு மேல் மறுதாம்பு செய்ய வேண்டும்.

பின் வெட்டுப்பகுதியை காப்பராக்சி குளோரைடு பசையைக்கொண்டு தடவி விட வேண்டும். பிறகு செடிக்கு மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும். இதிலிருந்து பல புதிய துளிர்கள் வளர ஆரம்பிக்கும். இவற்றிலிருந்து வளமான 6 முதல் 8 கிளைகள் மட்டும் விட்டு மற்ற கிளைகளை நீக்கி விட வேண்டும். பிறகு பூக்கள் பிடித்து காய்கள் வர ஆரம்பிக்கும். இதன்மூலம் ஒட்டுச்செடியை மேலும் 4 மாதங்களை வரை வளர்த்து அதிக மகசூல் பெறலாம். இந்த மறுதாம்பு முறைக்கு 150 தழைச்சத்து, 100 கிலோ மணிச்சத்து, 100 கிலோ சாம்பல் சத்து கொடுக்க வேண்டும். மறுதாம்பு தொழில்நுட்பம் முறையில் ஒரு ஹெக்டருக்கு 45 டன் வரை மகசூல் கிடைக்கும். இவ்வாறு தேவைப்பட்டால் மற்றொரு முறை மறுதாம்பு விட்டு அடுத்த அறுவடை பெறலாம். மேற்கண்ட முறைகளை கையாளும் போது விவசாயிகள் ஒரு சிறப்பான அறுவடையைப் பெறலாம்.

உங்கள் பார்வைக்கு:

காய்கறி பயிர்களைத் தாக்கும் செம்பேன் சிலந்திகள்


Spread the love

Post Comment

You May Have Missed