×

நெற்பயிரைத் தாக்கும் ஆனைக் கொம்பன் பூச்சிகள்

ஆனைக் கொம்பன் பூச்சிகள்

நெற்பயிரைத் தாக்கும் ஆனைக் கொம்பன் பூச்சிகள்

Spread the love

நெட்பயிரை தாக்கி பொருளாதார சேதத்தை விளைவிக்கும் பூச்சிகளில் முக்கிய பூச்சிகளைப் பற்றியும் அவற்றின் வாழ்க்கை சுழற்சி, தாக்குதல் அறிகுறிகள் மற்றும் கட்டுப்பாடு முறைகளை பற்றியும் இந்த பதிவில் நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஆனைக் கொம்பன் என்பது தமிழ்நாட்டில் தற்போது சில இடங்களில் அதிகப்படியான பொருளாதார சேதத்தை விளைவிக்கும் ஒரு பூச்சியாக காணப்படுகிறது. இது பொதுவாக ஏற்படுத்தும் அறிகுறி என்னவென்றால் வெங்காய குருத்து அல்லது இலை மற்றும் வெள்ளித்தண்டு என்று சொல்வார்கள் அதனை ஒத்த தோற்றத்தில் இந்த பூச்சிகளின் பாதிப்பினால் நெல் வயல்களில் நெல் தாள்கள் ஒரு வெங்காயக் குறுத்தினைப் போன்று இலைகள் சுருண்டு காணப்படும்.

அடையாளம் காணுதல்

இந்த நெல் தாள்கள் மற்ற பாதிப்பில்லாத தாவரத்திலிருந்து எளிதில் இனம் கண்டறிந்துகொள்ள முடியும். பாதிக்கப்பட்ட நெல் தாள்கள் இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் அல்லது இளம் பச்சை நிறத்தில் ஒரு வெங்காயத்தாள் போன்றே தோற்றமளிக்கும். இதுதான் ஆணைக் கொம்பன் ஏற்படுத்தும் தாக்குதல் அறிகுறியாகும்.

வளர்ச்சி நிலைகள்

ஆணைக்கொம்பன் பூச்சிகள் தங்களது வாழ்க்கை சுழற்சியில் நான்கு பருவங்களைக் கொண்டது. அவை முட்டை, புழுப்பருவம், கூட்டுப்புழு பருவம் மற்றும் ஈ பருவம். ஆனால் முதிர்ந்த அல்லது தாய்ப்பூச்சி இளஞ்சிகப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இந்த தாய் பூச்சி இளம் தளிர்களில் அல்லது இளம் இலைகளின் அடியில் முட்டைகளை இடும். இந்த முட்டைகளில் இருந்து வரும் இளம் லார்வாக்கள் நெல்லினுடைய தூதர்களுக்கு அடியில் சென்று வளரும் திசுக்களை உண்ண ஆரம்பிக்கும்.

ஆனைக் கொம்பன் பூச்சியால் ஏற்படும் பாதிப்புகள்

இதனால் குருத்து அல்லது தூர்கள் பாதிக்கப்பட்டு ஒரு வெங்காய குழல் போல மாறிவிடும். அத்தகைய சேதம் அடைந்த தூர்களிலிருந்து கதிர் வராது. எனவே இது பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய பூச்சியாக கருதப்படுகிறது.

நெல் ரகங்களில் ADT 45 முதலான ரகங்கள் இதற்கு எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களாக அறியப்பட்ட போதிலும், தற்போதைய சூழ்நிலையில் அனைத்து ரகங்களிலும் இதன் பாதிப்பு உணரப்பட்டு வருகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்

இயற்கை முறையிலான நோய் கட்டுப்பாடு

இப்பொழுது இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த தழைச்சத்து உரங்களை தேவையான அளவுகளில் பிரித்து இடுவதன் மூலம் இப்போது பருவத்தில் ஏற்படும் சேதத்தை நம்மால் குறைக்க முடியும். அதைபோல புழு ஒட்டுண்ணியான பிளாட்டிகேஸ்டர் ஒரைசே என்னும் ஒட்டுண்ணி இயற்கையிலேயே இந்த புழுக்களை தாக்கும் திறன் கொண்டவை. அத்தகைய ஒட்டுண்ணிகளை நாம் சேகரித்து பாதிக்கப்பட்ட வயல்களின் ஒரு சதுர மீட்டர் தூர்களுக்கு 10 எண்ணிக்கை என்ற அளவில் இந்த ஒட்டுண்ணிகளை நாம் விடுவதன் மூலம் இப்பூச்சியை இயற்கையிலேயே நாம் கட்டுப்படுத்த முடியும்.

இதையும் தாண்டி பொருளாதார சேதநிலையை எற்படுத்துமாயின் அதாவது நெல் தூர்களில் பத்து சதவீத வெங்காய தாள் போல மாறிவிட்டால் அதாவது நீங்கள் நூறு துர்களை ஆய்வு செய்தால் அவற்றில் பத்து தூர்கள் வெங்காயத்தாள் போல் மாறி இருந்தால் நீங்கள் இரசாயன முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

செயற்கையான இரசாயன மருந்துகள் வழி கட்டுப்பாடு

அதற்காக நீங்கள் உபயோகப்படுத்தும் ரசாயனங்கள் பல உள்ளன. அவற்றில் தற்போது உபயோகத்தில் உள்ள சிலவற்றை இப்போது பார்ப்போம். பைப்ரோனில் 5 SC – 3 மி.லி என்கிற ஒரு ரசாயன மருந்து 5 SC என்ற வடிவத்தில் கிடைக்கிறது. இதை ஒரு லிட்டர் நீருக்கு மூன்று மில்லி என்ற அளவில் நாம் தெளிக்க வேண்டும்.

ஆனால் பயிர்களில் இந்த பூச்சிகளுடைய தாக்குதல் ஏற்பட்ட பின் இதை தெளிக்கும் போது அதனுடைய பயன் குறைந்து விடுகிறது. அறிகுறி தென்பட்ட ஆரம்பத்திலேயே நாம் இவ்வாறு செய்தால் ஓரளவு நாம் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

அதற்காக நாம் செய்ய வேண்டிய மற்றொரு முறை என்னவென்றால் விதை நேர்த்தியாகும். நாற்று நடுவதற்கு முன்பே விதைகளை ரசாயனத்தில் நனைத்து பூச்சிக்கொல்லி அதாவது இமிடாகுளுபிரிட்   என்ற இராசயன மருந்து விதைகளுக்காக தயாரிக்கப்பட்டது. இமிடாகுளுபிரிட் 48% எஃப் எஸ் என்ற அந்த ரசாயனத்தை பயன்படுத்தி விதைகளை நனைத்து பின் நடலாம்.

இவ்வாறு நடும்போது நாற்றாங்களின் இந்த பிரச்சனை குறைகிறது. அதேபோல் நாற்று பிடுங்கி நடுவதற்கு முன்பாக நாற்றாங்காளை நனைத்து நடுவதன் மூலம் நாற்றுக்களின் வேர்களை குளோரிபைரிபாஸ் என்ற இரசாயனத்தில் நனைத்து நடுவதன் மூலமும் இதன் தாக்குதலை நாம் வெகுவாகக் குறைக்கலாம்.

உங்கள் பார்வைக்கு:

நெல் குருத்துப் பூச்சியின் தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகள்


Spread the love

Post Comment

You May Have Missed