நெற்பயிரைத் தாக்கும் பழுப்பு வண்ண தத்துப்பூச்சி
நெற்பயிரை தாக்கி விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் பொருளதார சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிகளில் மிகவும் முக்கியமானவை இந்த பழுப்பு வண்ண தத்துப்பூச்சியாகும். ஆங்கிலத்தில் இதனை பிரவுன் பிளாண்ட் ஹோப்பர் என்று அழைக்கிறார்கள்.
பொருளாதார சேதத்தை விளைவிக்கும் பழுப்பு வண்ண தத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சியின் முக்கியமாக இதன் புழுப்பருவம் நெல்பயிர்களை அதிகம் சேதப்படுத்தி நட்டத்தை ஏற்படுத்துகிறது. நெல்பயிர்களை பாதிக்கும் பூச்சிகளில் புகையான் என்று அழைக்கப்படும் இந்த பழுப்பு வண்ண தத்துப்பூச்சிக்கு சிறப்பான இடம் உண்டு.
இதை புகையான் என்றும் பழுப்பு நிற தத்துப்பூச்சி எனவும் அழைக்கிறார்கள். இதனுடைய இளம் லார்வாக்களும், முதிர்ந்த பூச்சிகளும் நெற்பயிரின் தூர்களில் அமர்ந்து சாரை உறிஞ்சி உண்பதால் பயிர்கள் வாடி அதிக மகசூல் இழப்பும் பயிர்கள் இறக்கும் நிலையும் ஏற்படுகிறது.
பாதிப்பை ஏற்படுத்தும் பருவங்கள்
இந்த பூச்சிக்கு மூன்று வாழ்க்கை பருவங்கள் உள்ளன. முட்டை பருவம், லார்வா பருவம் மற்றும் வளர்ந்த பூச்சி அல்லது தாய் பூச்சி என்று சொல்லலாம். இதில் இளம் லார்வாக்களும், வளர்ந்த பூச்சியும் தூர்களுக்கு அடியில் அமர்ந்து அதாவது நீர்மட்டத்திற்கு மேலே நெல் தண்டுகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து தொடர்ச்சியாக சாறை உறிஞ்சி உண்பதால் வட்ட வட்ட வடிவத்தில் தூர்கள் காய்ந்து அந்த தாக்குதல் அதிகரிக்க அதிகரிக்க இந்த காயும் நிலப்பரப்பு பெரிதாகிக் கொண்டே ஒரு மாடு மேய்ந்ததைப் போன்ற ஒரு காட்சி அளிக்கும் விதமாக இந்த பூச்சிகள் உடைய தாக்குதல் தென்படுகிறது.
புகையான் என்ற பெருக்கான காரணம்
இது பார்ப்பதற்கு அழகான பசுமையான நெல்வயலில் இந்த புகையான் பூச்சிகளால் பாதிக்கப்பட்ட செடிகள் பசுமை நிறத்தை இழந்து பழுப்பு நிறத்தில் செடி கருகியது போன்ற தோற்றதை எற்படுத்தும். இந்த பாதிப்பு உள்ள இடத்தில் மட்டும் ஒரு வட்டமான காய்ந்த அமைப்பை தென்படும். இதனால் இந்த பூச்சிகள் புகையான் என்று அறியப்படுகின்றன.
கட்டுப்படுத்தும் முறைகள்
இவற்றைக் கட்டுப்படுத்த நாம் மேற்கொள்ள வேண்டிய முறைகள் மாற்றுப் பயிர்கள் பயிரிடுவது. இந்த பூச்சிகள் விரும்பி உண்ணும் மற்ற பயிர் வகைள் மற்றும் களைச்செடிகளை அப்புறப்படுத்துவது மற்றும் வயலை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமும் இதன் தாக்குதலை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
புகையான் கட்டுப்பாட்டில் செய்யக்கூடாதவை
மேலும் அவற்றோடு தழைச்சத்தை தேவையான அளவு மட்டுமே இடவேண்டும். அதுவும் பிரித்து பிரித்து நான்கு முறைகளில் அதை இடுவதன் மூலம் இந்த பூச்சிகளின் பெருக்கத்தை நாம் கணிசமாக குறைக்கலாம். மற்றொரு முக்கிய முறை நீர் வடித்து நீர் கட்டுதல் அதாவது காய்ச்சல் என்று சொல்வார்கள். நீர் மறைய நீர் கட்டுதல். நீர் தொடர்ந்து தேங்கியிருப்பதால் இப்பூச்சிகள் நீரில் இனப்பெருக்கம் அதிக அளவு ஏற்படுகிறது.
வெறும் ஒரு 20 இலிருந்து 30 நாட்களுக்குள்ளேயே இதன் வாழ்க்கை சுழற்சி முடிவடைந்து அடுத்த சந்ததி உருவாகிறது. எனவே இதன் குறுகிய வாழ்க்கை சுழற்சியின் காரணமாக இதன் தாக்குதல் விரைவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே நீரை நன்கு வடித்து விட வேண்டும். நன்றாக காய்ந்த பின்பு மறுபடியும் நீர் கட்டுவதன் மூலம் இந்த பூச்சிகளை நாம் நல்ல முறையில் கட்டுப்படுத்தலாம்.
இயற்கையான தடுப்பு முறைகள்
இதையும் தாண்டி பொருளாதார சேதநிலையை ஒரு வேளை இந்த பூச்சி ஏற்படுத்துமாயின் இதனுடைய பொருளாதார சேத நிலை என்னவென்றால் ஒரு நெல் குத்துக்கு ஒரு சிலந்தி இருந்தால் ஒரு தூருக்கு இரண்டு பூச்சிகள் இருக்கலாம். ஒரு குத்து சுமார் 15 தூர்கள் இருக்கலாம் அந்த 15 தூர்களிலும் இரண்டு இரண்டு பூச்சிகள் இருந்தால் பரவாயில்லை. அதுவரை நாம் பொறுத்திருக்கலாம்.
நெல் வயல்களில் இயற்கையாக சில நீர்ப்பூச்சிகள், வண்டுகள், சிலந்திகள் ஆகியவை தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள் மற்றும் லார்வாக்கள் மற்றும் பெரிய பூச்சிகளை உண்டு அவற்றின் பெருக்கத்தை கட்டுக்குள் வைக்கின்றன. இதில் சிலந்திகள் இயற்கையாக இந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஒரு நன்மை செய்யும் பூச்சிகளாகும். புகையான் பூச்சியின் பாதிப்பு ஒரு குத்துக்கு இரண்டு பூச்சிகளுக்கு மேல் போய்விட்டால் அதே சமயத்தில் எந்தவொரு நன்மை செய்யும் பூச்சிகளும் இல்லாத பட்சத்தில் ஒரு தூருக்கு ஒரு பூச்சி இருந்தாலே நீங்கள் ரசாயன முறையை பயன்படுத்த ஆரம்பித்துவிடலாம்.
இரசாயன மருந்துகள்
பொருளாதார சேதநிலையை கடந்து பூச்சிகள் காணப்படும் போது பயன்படுத்தப்பட வேண்டிய ரசாயனங்கள் இங்கு பரிந்துரைக்கலாம். சாறு உண்ணும் பூச்சிகளை தாக்கக்கூடிய வகையில் இமிடாகுளோபின் 17.8 SL 50 மி.லி என்ற வகையை சார்ந்த ஊடுருவிச் செல்லும் பூச்சி கொள்ளிகளை நாம் பயன்படுத்த வேண்டும். இந்த மருந்து 17.8% என்ற வடிவத்தில் கிடைக்கிறது. இதனை தெளிக்க வேண்டும் என்றால் 50 மில்லியை மொத்தமாக கலந்து ஒரு ஒரு கப் ஒரு டேங்கிற்கு நீங்கள் ஊற்றுவதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 50 மில்லியை நீங்கள் பயன்படுத்தலாம்.
இதை சுழற்சி முறையில் நீங்கள் பயன்படுத்த வேண்டும் ஒரு தடவை பயன்படுத்தினால் வரும் முறை பிப்ரோனில் அல்லது இதுபோன்ற ஒரு ஊடுருவிச் செல்லும் பூச்சி மருந்துகள் ஒன்றை பயன்படுத்தலாம். பிப்ரோனில் 5% SC பயன்படுத்தினால் ஐந்து சதவீதம் எஸ் சி என்ற அளவில் கிடைக்கிறது அதை நீங்கள் ஒரு லிட்டர் நீருக்கு மூன்று மில்லி இல்லையென்றால் 400 மில்லி ஒரு ஏக்கருக்கு இந்த அளவில் நீங்கள் மேலே குறிப்பிட்டது போல கலந்து பயன்படுத்தலாம் அல்லது தெளிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இந்த புகையால் பூச்சியினால் ஏற்படும் மகசூல் இழப்பை தவிர்த்து நல்ல மகசூலை நம்மால் பெற முடியும்.
உங்கள் பார்வைக்கு:
ஆமணக்கு பயிரில் பூச்சி மேலாண்மை
Post Comment