×

நெல் குருத்துப் பூச்சியின் தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகள்

நெல் குருத்துப் பூச்சி

நெல் குருத்துப் பூச்சியின் தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகள்

Spread the love

நெற்பயிரை தாக்கி விவசாயிகளுக்கு பெருத்த பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிகளில் முக்கிய பூச்சியாக நெல் குருத்துப் பூச்சிகளைக் குறிப்பிடலாம். இந்த பதிவில் நெல் குருத்துப் பூச்சிகள் அல்லது நெல்லில் தண்டு துளைப்பான் பூச்சியினுடைய வாழ்க்கை சுழற்சி, அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி பார்க்கலாம்.

இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி நிலைகள்

முதலாவதாக நெல் தண்டு துளைப்பான் அல்லது குருத்துப் பூச்சி நெற் பயிர்களில் குறிப்படத்தக்க சேதத்தை ஏற்படுத்தி விவசாயம் செய்வதை ஒரு சவாலாக மாற்றும் பூச்சியாக உள்ளது. இந்த பூச்சியின் வாழ்க்கை சுழற்சி நான்கு பருவங்களை கொண்டது. முட்டை பருவம், கூட்டுப் புழு பருவம் மற்றும் அந்து பூச்சி அதாவது முதிர்ச்சியடைந்த பூச்சி ஆகிய நான்கு பருவங்களை கொண்டது.

புழுக்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்

இதில் புழுப்பருவமே நெருப்பயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பருவமாகும். இந்தப் புழுக்கள் நெற்பயிரின் தண்டுகளை துளைத்து திசுக்களை உண்ண ஆரம்பிக்கின்றன. இதனால் நெல் குருத்துகிள்ல உள்ள நடுக்குறுத்து காய்ந்து விடுகிறது. இதே தாக்குதல் பூக்கும் பருவத்தில் ஏற்படுமே ஆயின் வெளிவரும் கதிர்கள் வெண்மை நிறத்தில் சோடையாக அல்லது ஆரோக்கியமற்றதாக வெளி வருகின்றன. ஆகவே இப்பழுக்களின் தாக்குதலால் குறுத்து சிதைவு மற்றும் வெண்மை நிறக்கதிர் ஆகிய இரண்டு அறிகுறிகளை நாம் நெற்பயிரில் பார்க்கலாம்.

இந்த பூச்சியின் வாழ்க்கை சுற்சியை எடுத்துக் கொண்டோம் என்றால் இதன் முதிர்ந்த அந்தப் பூச்சி மஞ்சள் நிறத்தில் இருக்கும். இவை இலைகளின் நுனியில் அமர்ந்து முட்டை குவியல்களை இரவு நேரங்களில் வைக்கும். ஒரு முட்டை குவியலில் 100 லிருந்து 300 முட்டைகள் வரை இருக்கும். அந்த முட்டைக் குவியலின் மேல் தன்னுடைய உடம்பில் உள்ள முடிகளால் அதை மூடி வைத்துவிடும்.

இவ்வாறு உள்ள முட்டை குவியல்கள் நெல் இலையின் நுனிப் பகுதியில் சிறு சிறு நீள் வட்ட குவியல்களாக காணப்படும். ஒரு சில நாட்களில் இந்த முட்டை குவியலிலிருந்து சிறிய லார்வாக்கள் எனப்படும் புழுக்கள் வெளிவந்து நெற்பயிரின் தண்டுகளுக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்த ஆரம்பிக்கும். ஒரு முட்டை குவியல்களில் உள்ள புழுக்கள் அருகிலுள்ள தூர்களுக்கு காற்றின் மூலம் பரவி அந்த இடங்களிலும் இதுபோன்று சேதத்தை அதிகப்படுத்தும்.

முதிர்ந்த அந்துப்பூச்சி

நெல் குருத்துப் பூச்சி
xr:d:DAF7zk6pkvs:1891,j:5908021143574930004,t:24040913

நெல்லின் தண்டுகளை துளைத்து திசுக்களை உண்டு இந்த புழுக்கள் முதிர்ச்சி அடைந்த பின்பு கூட்டுப்புழுவாக தண்டின் உள்ளேயே ஒரு உறங்கும் நிலைக்கு சென்று விடும். அந்தக் கூட்டுப் புழு பருவம் கடந்த பின் அதிலிருந்து முதிர்ச்சியடைந்த அந்து பூச்சிகள் வெளிவரும். அந்த பூச்சிகள் என்ற சொல்லுக்கான அர்த்தம் என்னவென்றால் அதனுடைய எல்லா நடவடிக்கைகளும் மாலை நேரங்களில் சூரியன் மறைவுக்குப் பின் நிகழும். அதாவது இன சேர்க்கை, முட்டை இடுதல் போன்ற பணிகள் இரவு நேரங்களில் நடக்கும் இதனால் இவ்வகை பூச்சிகளை அந்துப் பூச்சிகள் என்கின்றோம்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

இந்த மஞ்சள் தண்டு துளைப்பான் அந்துப் பூச்சி பகல் வேலைகளில் நெல் தாவரத்தின் இலைகளின் நுனியில் அமர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். இவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை இப்பொழுது பார்க்கலாம். இவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளில் ஒன்று நாற்றங்கள் பயிரில் அவற்றின் நுனிகளை கிள்ளி நாற்றுக்களை நடுவது. இதன் மூலம் இலைகளின் நுனிகளில் உள்ள முட்டை குவியல்களை நம்மால் அப்புறப்படுத்த முடிகிறது.

இரண்டாவதாக இன கவர்ச்சி பொறிகளைப் பயன்படுத்துதல். இந்த இனக்கவர்ச்சி பொறிகள் தண்டு துளைப்பான்களுக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை நீங்கள் ஒரு ஏக்கருக்கு ஐந்து வீதம் வைப்பதன் மூலம் ஆண் அந்தப் பூச்சிகளை கவர்ந்து இனச்சேர்க்கை நடப்பதைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி இவற்றைக் கட்டுப்படுத்தும் விளக்குப் பொறிகள் கூட பயன்படுத்தலாம். ஏனென்றால் விளக்கு பொறிகளால் இந்த அந்த பூச்சிகள் கவரப்பட்டு அதில் வந்து சிக்கும். இதை பார்த்து பூச்சி நடமாட்டத்தை கண்காணிக்க இவை பயன்படுகின்றன.

இவற்றின் பாதிப்புகள் பொருளாதார சேதநிலையை எட்டுமாயின் அதாவது பத்து சதவீதம் குருத்துச் சிதைவு அதாவது ஒரு 100 தூர்களை நீங்கள் பார்த்தால் அதில் பத்து தூர்கள் சிதைந்து காணப்பட்டால், அதேபோல் வெண் கதிராக இருந்தால் பாதிப்பு அதிகமாக இருப்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதுவே இரண்டு சதவீதம் 100 கதிர்களில் இரண்டு கதிர்கள் வெண் நிறமாக காணப்பட்டால் சோடையாக இருந்தால் அப்பொழுது ரசாயன முறைகளை நாம் கையாள வேண்டும்.

பூச்சிக்கொல்லி மருந்துகள்

இப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் சிலவற்றை பயன்படுத்தி பலன் அடைய முடியும். புளுபென்டிமைட் எனப்படும் ஒரு ரசாயன மருந்து 39.35% வருகிறது. இதில் நீங்கள் ஒரு ஏக்கருக்கு 20 கிராம் பயன்படுத்தினால் போதுமானது. நீங்கள் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு நீரை தெளிப்பீர்கள்? ஒருவேளை பத்து டேங்க் நீர் தெளித்தீர்கள் என்றால் அந்த பத்து டேங்கிற்கும் 20 கிராம் நீங்கள் பயன்படுத்தினால் போதுமானது.

அதேபோல் இன்னொரு பூச்சிக்கொல்லி குளோரன்டரனிலிபுரூள் 18.5 SC – 60 மி.லி மருந்து சதவீதத்தில் வருகிறது. இதனை நீங்கள் உதாரணத்திற்கு நீங்கள் பத்து டேங்க் நீர் உபயோகப்படுத்துவீர்கள் என்றால் 60 மில்லியை 10 கப் நீரில் கலந்து நன்றாக கலக்கி ஒவ்வொரு டேங்கிற்கும் ஒவ்வொரு கப் விதம் நீங்கள் விடும்போது 60 மில்லி ஒரு ஏக்கருக்கு நீங்கள் பயன்படுத்த முடியும்.

மஞ்சள் ஒட்டும் அட்டைகள்

இதற்கிடையில் நீங்கள் இந்த பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து மஞ்சள் ஒட்டும் அட்டைகளைப் பயன்படுத்தலாம். மஞ்சள் நிற ஒட்டும் அட்டைகளில் முட்டை ஒட்டுண்ணிகள், லார்வாக்கள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் ஆகியவை ஒட்டிக்கொள்ளும். அதனை ஏக்கருக்கு இரண்டு சிசி என்ற விகிதத்தில் நீங்கள் எப்பொழுது இந்த அந்து பூச்சி நடமாட்டம் தென்படுகிறதோ அந்த சமயத்தில் நீங்கள் இந்த ஒட்டும் அட்டைகளை உங்கள் வயலில் நீங்கள் சிறு சிறு துண்டுகளாக வெட்டி இலைகளின் அடியில் கட்டிவிடலாம்.

இந்த ஒட்டும் அட்டைகளை 15 நாள் இடைவெளியில் ஒரு மூன்று முறை நீங்கள் கட்டித் தொங்க விடவேண்டும். இதுகூட ஒரு நல்ல முறையாகும் இந்த ஒட்டும் அட்டைகள் எங்கெல்லாம் முட்டை குவியல்கள் உள்ளனவோ அவற்றிற்கு இடையில் வைக்கும்போது இவற்றின் எண்ணிக்கை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இதன் முட்டைக் குவியல்கள் மற்றும் லார்வாக்களை உண்ணுவதற்கு நன்மை செய்யும் குளவிகள் போன்ற பூச்சிகள் வரும்போது இயல்பாக இவற்றின் முட்டைகள் மற்றும் லார்வாக்களை உண்டுவிடுகின்றன. இதனால் இயல்பான இயற்கையான ஒரு தடுப்பாக இந்த மஞ்சள் ஒட்டும் அட்டைகள் பயன்படுகின்றன. இப்பொழுது விவசாயிகள் மத்தியில் அதிக அளவு பிரபலமாக உள்ள இந்த மஞ்சள் ஒட்டும் அட்டைகள் மிகப்பெரிய அளவில் விளை நிலங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கிறது.

வேறு வழிகளில் கட்டுப்படுத்துவது என்றால் இப்பூச்சிகளின் முட்டை குவியல்களை சேகரித்து அழித்தல் ஆகும். ஏனென்றால் எளிதில் இவை நம் கண்களுக்கு தென்படும். முட்டைக் குவியல்கள் இலைகளின் நுனியில் இருப்பதால் அவற்றை நாம் சேகரித்து அதற்காக ஒரு தனி வேலை ஆட்களை நியமித்து முட்டை குயில்களை சேகரித்து அழிப்பதன் மூலம் நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான புழுக்களை நம்மால் கொள்ள முடியும். ஒரு முட்டை குவியலிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புழுக்கள் வந்து சேதத்தை ஏற்படுத்தும். இம்முறையைப் பயன்படுத்தி பெருமளவில் இவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

அதோடு குருத்து சிதைந்த அந்த குருத்துக்களையும், பாதிக்கப்பட்ட வெண்கதிரையும் ஒரு பாலிதீன் கவரைக் கொண்டு சென்று அதில் சேகரித்து அவற்றை அப்புறப்படுத்தி எரிப்பதன் மூலமோ அல்லது புதைப்பதன் மூலமோ இந்தப் புழுக்கள் உடைய சேதத்தை குறைக்கலாம். இவ்வாறு இந்த நெல் அந்துப்பூச்சி அதாவது தண்டு துளைப்பானை நீங்கள் கண்காணித்து அதை நல்ல முறையில் கட்டுப்படுத்தி அதிக மகசூலை எடுக்க முடியும்.

உங்கள் பார்வைக்கு:

கரும்பு பயிர்களில் மாவு பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்


Spread the love

Post Comment

You May Have Missed