×

முருங்கை இலை சாகுபடி செய்யும் முறை

முருங்கை இலை சாகுபடி

முருங்கை இலை சாகுபடி செய்யும் முறை

Spread the love

தென்னை மரம், வாழை மரம் போன்ற பயிர்களை தமிழ்நாட்டில் கற்பக விருட்சம் என்று குறிப்பிடுவார்கள். காரணம் இந்த மரங்களின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படும் வகையில் அமைந்துள்ளன. அதேபோல ஒரு அதிசய மரம்தான் இந்த முருங்கை மரமும். முருங்கை மரத்தின் பெரும்பாலான பகுதிகளும் பயன்படுகின்றன.

இந்தியாவை தாயமாகக் கொண்டது இந்த முருங்கை மரம். வெப்பமண்டல பிரதேசங்களில் பரவலாக பயிரிடப்படும் இந்த முருங்கையானது காய்களுக்காக பயிரிடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சர்வதேச அளவில் முருங்கை இலைகளுக்காக தேவை தற்போது அதிகமாகி வருவதால் முருங்கையை இலைகளுக்காக சாகுபடி செய்யக்கூடிய விருப்பம் விவசாயிகளிடையே அதிகமாகி வருகிறது.

எனவே தற்போது பெரும்பாலும் முருங்கை இலைகளுக்காகவே பெரும்பாலான இடங்களில் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்த பதிவில் முருங்கை இலை சாகுபடி முறைகளை தொடர்ந்து விரிவாக காணலாம்.

நிலத்தை தயார் செய்தல்

முருங்கை விதைகள் விதைப்பதற்கு முன்பாக நிலத்தை தகந்த முறையில் தயார் செய்வது அவசியமானது. நிலத்தினை முதலில் நான்கு முதல் ஐந்து முறை நன்கு உழவு ஓட்ட வேண்டும். ஐந்தாவது உழவு ஓட்டுவதற்கு முன்பாக அதில் தேவையான அளவு அதாவது ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் போட்டு பரப்பி நன்கு உழவு ஓட்டி மண்ணை தயார் செய்ய வேண்டும்.

மேட்டுப்பாத்திகள் அமைத்தல்

இரண்டரை மீட்டர் இடைவெளியில் முருங்கை மரம் பயிரிடப்படுகிறது. முருங்கையின் ஊடுபயிராக தக்காளி, மிளகாய் போன்ற செடிகள் வளர்க்கப்படுகின்றன. நல்ல அகலமான மேட்டுப்பாத்திகள் அதாவது 150 சென்டிமீட்டர் அகலமும், தேவையான அளவு நீளமும் கொண்ட அகலமான மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும்.

மேட்டூப்பாத்திகள் குறைந்து அளவு அரை அடி உயரமாவது இருக்குமாறு மேட்டுப்பாத்திகள் அமைத்து அதில் மேட்டுப்பாத்திகள் இரு முனைகளில் இருந்தும் அரை அடி தள்ளி இருமுனைகளிலும 15 சென்டிமீட்டர் 15 சென்டிமீட்டர் ஒதுக்கிவிட்டு மற்ற இடங்களில் நான்கு வரிசை அதாவது வரிசைக்கு வரிசை 40 சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு செடிக்கு செடி 20 சென்டிமீட்டர் இருக்குமாறு விதைகளை விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 15 கிலோ விதைகள் தேவைப்படுகிறது. விதைப்பதற்கு தரமான விதைகளை தேர்வு செய்து விதைப்பதற்கு முன்பாக டிரைகோடெர்மா விரிடி என்ற உயிர் பூஞ்சான கொல்லிகளை ஒரு கிலோவுக்கு 4 கிராம் அதாவது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் டிரைக்கோடெர்மாவிரிடி என்கிற உயிர் பூஞ்சானக் கொல்லியை கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

சொட்டுநீர் பாசனம் அமைத்தல்

முழுவதும் சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி முருங்கை சாகுபடி செய்யும்போது நல்லபடியான மகசூல் பெற வாய்ப்புள்ளது. விதைகள் முளைக்க எட்டு முதல் பத்து நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இந்த எட்டில் இருந்து பத்து நாட்கள் வரை நிலத்தில் மிதமான ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் நீர் தேங்கி நிற்காதவாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். 75 நாட்கள் முதல் நாம் அறுவடையை தொடங்கலாம். நிலத்திலிருந்து ஒன்றை அடி அதாவது 45 சென்டிமீட்டர் அளவு உயரத்தில் நாம் அறுவடை மேற்கொள்ளலாம். அறுவடை நடந்து அடுத்து ஒவ்வொரு 35 லிருந்து 45 நாட்கள் இடைவெளியில் மறுபடியும் அறுவடை செய்யலாம். இவ்வாறு ஒரு வருடத்திற்கு எட்டு முதல் 10 அறுவடை மேற்கொள்ளலாம்.

உர மேலாண்மை

இதற்கான உர பரிந்துரை என்று பார்க்கும்போது ஏக்கருக்கு 100 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதனை 10 சமபங்காத பிரித்து ஒவ்வொரு அறுவடைக்கும் பின்னரும் சொட்டுநீர் பாசனத்தின் வழியாக உரமாக நீர் மூலம் கொடுக்க வேண்டும். இவ்வாறு நீர் பாசனத்தின் மூலம் உரத்தைக் கொடுக்கும்போது இலைகளின் வளர்ச்சி சிறப்பாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் குறிப்பிடுகின்றன.

அறுவடை செய்யும் முறை

முருங்கை இலை சாகுபடி

ஒவ்வொரு முறையும் ஒன்றரை அடி உயரத்தில் அறுவடை செய்து அறுவடை செய்யப்பட்ட இலைகளை நாம் நிழலில் உலர்த்தி அவற்றிலுள்ள கிளைகள் மட்டும் பிரித்து எடுக்க வேண்டும். நான்கிலிருந்து ஐந்து நாட்கள் நிழல் பாங்கான இடங்களில் இலைகளை உலர்த்தும்போது நன்கு காய்ந்த இலைகள் நமக்கு கிடைக்கும். இவ்வாறு நன்கு உலர்த்தப்பட்ட இலைகளை நாம் சந்தைக்கு பயன்படுத்தலாம்.

முருங்கை இலையானது 80 முதல் 85 சதவிகிதம் ஈரப்பதம் கொண்டது. ஒரு கிலோ இலைகளை நிழற்பாங்கான இடத்தில் உலர்த்தும்போது 18 சதவிகித உலர் எடை கிடைக்கிறது. அதாவது 180 கிராம் அளவுக்கு நமக்கு உலர்ந்த இலைகள் மகசூலாக கிடைக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் அருவடை செய்த இலைகளை உலர்த்தி சந்தைப்படுத்தும்போது ஒரு கிலோவுக்கு சந்தை விலையில் 60 முதல் 80 ரூபாய் வரை விலை போகிறது.

முருங்கை இலை சந்தை வாய்ப்பு

முருங்கை இலை சாகுபடி

இவ்வாறு சாகுபடி செய்யும்போது சாகுபடி செலவுகளை ஒப்பிடுகையில் ஒரு ஏக்கருக்கு முதல் வருடத்தின் விதைகள், சொட்டு நீர் பாசனம், உர செலவு மற்றும் களைப் பறித்தல் போன்ற செலவுகள் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் செலவாகிறது. இலைகள் சாகுபடி அதாவது மொத்தமாக ஒரு ஏக்கருக்கு 10 அறுவடையில் 2.5 முதல் 3 டன் இலைகளை அறுவடையாக பெறுகிறோம். சந்தை மதிப்பில் உலர் இலைகள் ஒரு கிலோவிற்கு ரூபாய் 50 கிடைத்தால் கூட முதல் வருடத்திலேயே ஒன்றரை லட்சம் லாபம் கிடைக்கிறது.

அடுத்தடுத்த வருடங்கள் நமக்கு வேலையாட்கள் மற்றும் உர செலவு போக நல்ல வருமானம் விவசாயிகள் பெற்று பயன்படலாம். சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் உணவு உற்பத்தி மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களில் முருங்கை இலைகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் முருங்கை இலையை உற்பத்தி செய்து நல்ல மகசூலும், நல்ல வருமானமும் பெறலாம்.

உங்கள் பார்வைக்கு:

வாழை சாகுபடியில் நோய் மேலாண்மை


Spread the love

Post Comment

You May Have Missed