×

சப்போட்டா பயிரில் அடர் நடவு முறை

சப்போட்டா பயிரில் அடர் நடவு முறை

சப்போட்டா பயிரில் அடர் நடவு முறை

Spread the love

அடர் நடவு முறை என்றால் என்ன என்று முதலில் தெரிந்துகொள்வோம். இந்தியாவில் பழைய நடைமுறையில் 10 மீட்டருக்கு 10 மீட்டர் என்ற அளவில் இடைவெளி விட்டு நடவு செய்யும் முறைதான் கடைபிடிக்கப்பட்டது. அடுத்து 8 மீட்டருக்கு 8 மீட்டர் என்ற அளவில் சாகுபடி செய்தார்கள். ஆனால் தற்போது அடர் நடவு முறையில் 8 மீட்டருக்கு 4 மீட்டர் என்ற அளவில் நடவு செய்கின்றனர். ஒரு வரிசைக்கும் மற்றொரு வரிசைக்கும் இடையே இடைவெளி 8 மீட்டரும், ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடையே இடைபெளி 4 மீட்டர் என்ற அளவில் இடைவெளி விட்டு நடவு செய்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் அடர் நடவு முறையென்பது ஒரு முக்கியமான தொழில்நுட்பம் ஆகும். சப்போட்டாவில் இந்த தொழில்நுட்பம் நல்ல மகசூல் அளிக்கும் முறையாகும். இவ்வாறு அடர் நடவு செய்யும்போது ஒரு ஹெக்டருக்கு 312 மரங்கள் என்ற அளவில் நாற்றுகளை நடவு செய்ய முடியும். இதுவே 8 மீட்டருக்கு 8 மீட்டர் என்ற அளவில் நடவு செய்யும்போது 156 மரங்கள் மட்டுமே நடவு செய்ய முடியும்.

கவாத்து செய்யும் முறை

சப்போட்டாவில் ஆரம்பத்தில் கிளை படர்வு மேலாண்மை என்பது முக்கியமான விசயமாகும். சப்போட்டாவை பொறுத்தவரை ஒட்டுச்செடி என்ற முறையைப் பயன்படுத்துகிறோம். சப்போட்டாவை பொறுத்தவரை வேர்செடியாக பாலா அல்லது கிர்னி எனப்படும் செடியை வேர்ப்பகுதியாகவும், தண்டுப் பகுதியில் சப்போட்டா தண்டுப்பகுதியாகவும் ஒட்டுக்கட்டி பயன்படுத்துகிறோம்.

அடர் நடவுக்கு ஏற்ற ரகங்கள்

சப்போட்டா பயிரில் அடர் நடவு முறை

சப்போட்டாவில் அடர் நடவு முறைக்கு உகந்த ரகங்களாக சில வகைகள் உள்ளன. அதனை பொறுத்தவரையில் பெரியகுளம் -1, பெரியகுளம் – 3, பெரியகுளம் – 4 என்ற ரகங்கள் அடர்வு நடவுக்கு ஏற்ற ரகமாகும். அதேபோல கோ 3 என்ற ரகமும் அடர் நடவுக்கு ஏற்ற ரகமாக பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ரகங்கள் நேரான வளர்ச்சி இருக்கும். படர்ந்த முறையில் இந்த ரகங்கள் வளருவதில்லை. எனவே இது அடர் நடவு முறைக்கு ஏற்றதாக அறியப்படுகிறது.

சப்போட்டா நடவு செய்த பிறகு தரையிலிருந்து 90 செ.மீட்டர் உயரம் வளரும் வரை எந்த கிளைகளும் வராத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்துவது ஒட்டுச்செடி என்பதால் அதன் வேர்ச்செடியிலிருந்து கிளைகள் முளைக்கும். அதனை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும்.

90 செ.மீட்டருக்கு மேல் தாவரத்தில் ஒரு அடி வரைக்கும் கிளைகள் வளருவதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். இந்த வகையில் நான்கு திசையிலும் பரவலாக கிளைகள் தோன்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உருவாகம் முதல்நிலை வேரிலிருந்து இரண்டாம் நிலை கிளைகள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த இரண்டாம் நிலை கிளையிலிருந்து ஸ்ட்ரெசரி கிளைகள் உருவாகும். இவ்வாறு உருவாகும் கிளைகளைக் கொண்டு மரத்தைச்சுற்றி ஒரு பந்து போன்ற அமைப்பில் கிளைகள் மற்றும் இலைகள் வளர அனுமதிக்க வேண்டும். கிளைப்படர்வு மேலாண்மை இதில் மிக முக்கிய ஒன்றாகும்.

கவாத்து செய்வதால் ஏற்படும் நன்மைகள்

பழைய முறையில் 8 க்கு 8 மீட்டர் என்ற அளவில் நடவு செய்யும்போது கிட்டத்தட்ட 25 முதல் 30 வருடங்கள் வளர்ந்த மரங்கள் கூட ஒன்றை ஒன்று வளர்ந்து தொடுவதில்லை. மாறாக 8 மீட்டருக்கு 4 மீட்டர் இடைவெளியில் அடர் நடவு செய்யும்போது அருகருகே உள்ள மரங்கள் ஒன்றையொன்று மிஞ்சி வளர முயற்சிக்கும்போது சூரிய ஒளியானது மரங்களுக்கு சரியாக கிடைக்காமல் போகும். இதனால் சூரிய ஒளி கிடைக்காமல் மரங்களால் சரியாக ஒளிச்சேர்க்கை செய்ய முடியாது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும்.

எனவே இப்படிபட்ட சூல்நிலையில் பக்க கிளைகளில் நுனியிலிருந்து ஒரு அடி தூரத்தில் கவாத்து அல்லது வெட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சூரிய ஒளி மரத்திற்கு பரவலாக கிடைக்கும். மேலும் ஒளிச்சேர்க்கை முழுவதுமாக நடைபெறுவதால் நல்ல மகசூல் கிடைக்கும்.

அடர் நடவு முறையின் நன்மைகள்

அடர் நடவு முறையில் சப்போட்டா நடவு செய்யும்போது ஒரு ஹெக்டருக்கு 24 டன் வரை மகசூல் கிடைக்கும். மாறாக 8 மீட்டருக்கு 8 மீட்டர் என்ற இடைவெளியில் நடவு செய்யும்போது 14 டன் மட்டுமே ஒரு ஹெக்டருக்கு மகசூல் கிடைக்கும். PKM 1 என்ற ரகத்தை அடர் நடவு முறையில் நடவு செய்யும்போது ஒரு ஹெக்டருக்கு 80 முதல் 100 டன் வரை மகசூல் கிடைக்கும்.

அடர் நடவு முறையில் நடவு செய்து வளர்க்கும்போது 25 வருடங்களுக்கு பிறகு மரங்களுடைய அடிமரம் தடித்ததாகவும், கிளைகள் அடர்த்தியாக படர்ந்துவிடும். இதனால் மரங்களின் ஒளிச்சேர்க்கை பாதிக்கும். அந்த நேரத்தில் வரிசையில் மரங்களில் ஒன்று விட்டு ஒன்று மரங்களை நீக்கி விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தற்போது இரண்டு மரங்களுக்கு இடையேயான இடைவெளி 8 க்கு 8 மீட்டர் என்ற அளவில் இருக்கும். மகசூலும் பாதிக்காமல் இருக்கும். 25க்கு வருடத்திற்கு மேலும் நம்மால் தொடர்ந்து நல்ல விளைச்சலைப் பெற முடியும்.

சப்போட்டா அருவடைக் காலங்கள்

சப்போட்டாவைப் பொறுத்தவரை வருடத்திற்கு இரண்டு முறை பழங்கள் கொடுக்கின்றன. வெப்பக்காலங்களான மே, ஜூன் காலக்கட்டத்திலும், செப்டம்பர், அக்டோபர் காலகட்டத்திலும் விளைச்சல் கொடுக்கும். இந்த காலக்கட்டத்தில் சரியான முறையில் சந்தைப்படுத்தும் போது விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

குறிப்பாக சப்போட்டா மரங்களில் மரத்திலேயே பழங்கள் பழுக்க அனுமதிப்பதில்லை. நன்கு வளர்ந்த காய்களைப் பறித்து பின்புதான் பழுக்க அனுமதிக்கப்படுகிறது. எனவே அவற்றை முறையாக சேமிப்பதற்கும், பழுக்க வைப்பதற்கும் முறையான தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இதனை முறையாக கையாண்டு விவசாயிகள் சந்தைப்படுத்த வேண்டும்.

சப்போட்டாவை அடர் நடவு முறையில் சாகுபடி செய்யும்போது விவசாயிகளுக்கு நிகர லாபமாக ஒரு ஹெக்டருக்கு குறைந்தபட்சம் ஒன்றரை இலட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.

உங்கள் பார்வைக்கு:

மாவில் அடர் நடவு முறை தொழில்நுட்பம்


Spread the love

Post Comment

You May Have Missed