×

About Us

Spread the love

my photo

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

Learninsects.com என்ற இந்த வலைதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

என் பெயர் கா.செந்தில்குமார். எண்:36 மோதிலால் தெரு, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா, அஞ்சல் எண்: 612 001. என்ற முகவரியில் வசித்து வருகிறேன்.

நான் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றவன். மேலும் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். தற்போது விவசாயத்தில் புதிய உத்திகளை கையாண்டு வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறேன். தற்போதைய நிலையில் இந்தியா மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் பயிரப்படும் முக்கிய பயிர்கள், பருவத்திற்கு ஏற்ற பயிர் வகைகள், வெற்றிகரமான விவசாய நடைமுறைகள், விவசாயிகளின் ஆலோசனைகள் மற்றும் விவசாயத்தில் தனிப்பட்ட முறையில் என்னுடைய அனுபங்கள் குறித்து எழுதி இருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் உண்மையில் பயனுள்ளவையா? நம் மண்ணுக்கும், மக்களுக்கும் ஏற்புடையதா? இதில் உள்ள நல்ல விடயங்கள் மற்றும் ஆபத்துகள் குறித்த பல தகவல்களை இங்கே விவாதிக்க இருக்கிறேன். விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் மிக குறைவாக தமிழில் கிடைக்கின்றன. ஆகவே தமிழில் இவை பற்றிய முழுமையான விடயங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதே எனது முதல் நோக்கம். அதனால் இந்த வலைதளத்தை தொடங்க எண்ணினேன். நான் அறிந்துகொண்ட வகையில் விவசாயத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் பூச்சிகள், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பல விடயங்களை உங்களுக்கு எளிமையாக தமிழ் மொழியில் விளக்கியிருக்கிறேன்.

இந்த பதிவுகள் நவீன முறையில் விவசாயம் செய்ய முற்படும் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்று ஆழமாக நம்புகிறேன். இந்த வலைதளத்தில் விவசாயத்தில் உள்ள சாகுபடி முறைகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பூச்சிகள் மேலாண்மை குறித்த பல விடயங்களை தொடர்ச்சியாக எழுத இருக்கிறேன். தொடர்ந்து என்னுடைய எழுத்திற்கு தங்களுடைய முழுமையான ஆதரவைத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். உங்களுடைய ஆதரவும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் என்னை மேலும் திறம்பட எழுதத் தூண்டும் என்று நம்புகிறேன். நன்றி…


Spread the love